பக்கம்:நலமே நமது பலம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 117

அசைந்திடாமல் இருப்பது போல் பிடித்துத் தூக்கிச் செல்ல வேண்டும். -

விபத்து நேர்கிறபொழுது மனிதர்களுக்கு ஏற்படுகின்ற அடிகளில், இடிபாடுகளில் எந்த உறுப்புப் பகுதி அதிகமாகத் தாக்கப்பட்டிருக்கிறது என்பது, விபத்தின் தன்மைக்கேற்பவே அமையும்.

இவ்வாறு ஏற்படுகிற பாதிப்புகளை நாம் 7 வகையாகப் பிரிக்கலாம்.

1. தலையில் மற்றும் முகத்தில் ஏற்படுகின்ற காயங்கள்.

2. மார்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பாகங்களின் காயங்கள்.

3. கைகளில் புஜங்களில் ஏற்படுகின்ற காயங்கள்.

4. இடுப்பு, அடிவயிறு, பின்புறத்தில் ஏற்படுகின்ற காயங்கள்.

5. கால்களில் ஏற்படுகின்ற காயங்கள்.

6. கழுத்து மற்றும் முதுகுத் தண்டுப் பகுதிக் காயங்கள்.

7. பலதரப்பட்ட உள் காயங்கள்.

இத்தகைய காயங்களுக்கேற்ற தூக்கிச் செல்லும் முறைகளைப் பின்வரும் விளக்கத்தைப் புரிந்து கொண்டு, பின்பற்றலாம். /. தலையில் முகத்தில் ஏற்படுகின்ற காயங்கள்:

1.1. காயம்பட்டவர் (Victim) சுயநினைவுடன் இருந்தால்

சற்றுத் தலை நிமிர்ந்து இருப்பது போல இருக்கச் செய்து, அவரைத் தொட்டில் தூக்கல் (Chadle) போல அவரைத் தூக்கிச் செல்லலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/119&oldid=690925" இலிருந்து மீள்விக்கப்பட்டது