பக்கம்:நலமே நமது பலம்.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


12O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

4. இடுப்பு, அடிவயிறு, பின்புறக் காயங்கள்:

4.1. இடுப்பு, அடிவயிறு மற்றும் பின்புறத்தில் (Pelvic) ஏற்படுகின்ற காயங்களை எல்லாம், மிகச் சாதாரணம் என்று எண்ணிவிடக்கூடாது. காயங்கள் ஏற்படுகின்றன என்றால், அவை வயிற்றின் உள்ளே உள்ள பகுதிகளையும் தான் பாதிக் கின்றன. தொடர்புடைய உட்புற உறுப்புகள் மென்மையும் நுண்மையும் நிறைந்தனவாகவே அவைகள் இருப்பதால் தான், உடனடியாகப் பாதிக்கப்படுகின்றன என்பதைக் கருத்தில் கொண்டு முதலுதவியைச் செய்திட வேண்டும்.

4.2. இவ்வாறு காயம் பட்டவரை, முகம் மேற்புறம்

பார்த்திருப்பது போல, தூக்குக் கட்டிலில் கிடத்தி எடுத்துச் செல்லும் முறையில்தான், கொண்டு செல்ல வேண்டும்.

5. கால்களில் ஏற்படும் காயங்கள்

5.1. கால்களில் காயங்கள் ஏற்பட்டால், நிற்கவே முடியாது என்பதால், தூக்கிச் செல்லும் முறைதான் சரியானதாகும்.

5.2. காயம் கடுமையானதாக இருந்தால், தூக்கும் கட்டில் முறை அல்லது நான்கு கை இருக்கை முறை போன்றவற்றில் தூக்கிச் செல்லும்போதுதான் காயமடைந்தவர் அதிகக் கஷடங்கள் பெற மாட்டார்.

5.3. உதவியாளர் ஒருவரே இருந்து, கால்களில் உள்ள காயம் சிறிய காயமாக இருந்து, காயமடைந்தவரும் அதிகக் கனமில்லாதவராக இருந்தால், குதிரை ஏற்றும் முறை என்பது போல, அவரை முதுகில் ஏறிக் கொள்ளச் செய்து, அவரைக் கைகளால் கழுத்துப் பக்கத்தைப் பித்துக் கொள்ள வைத்து, அவரது முழங்கால் பகுதிகளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு தூக்கிச் செல்லலாம்.