பக்கம்:நலமே நமது பலம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 121

5.4. அதிக உதவியாளர்கள் இருந்தால், கை இருக் கையில் வைத்துக் கொண்டு செல்லலாம்.

- -

6. கழுத்து, முதுகுத் தண்டுக் காயங்கள்:

6.1. கழுத்திலும் முள்ளந் தண்டிலும் காயங்கள் ஏற்பட்டால், அதற்காக மிகவும் எச்சரிக்கையுடன் உதவ வேண்டும். வேறு வழியே இல்லை என்ற நிலை வந்தால் ஒழிய, தூக்கிச் செல்ல முயற்சிக்கக்கூடாது.

6.2. தவறான தூக்கும் முறையால் கடுமையான சிக்கல்கள் ஏற்படும். பாதிக்கப்பட்ட பகுதிகள் எல்லாம் நுண்மை நிறைந்தனவாக இருப்பதால், தவறான அணுகு முறையால் பாதிக்கப்பட்டுப் பக்கவாதம் கூட ஏற்படலாம். உடலிலும் உணர்ச்சியற்ற நிலையும் ஏற்படலாம். -

6.3. முகத்தை மேற்புறமாக இருக்க வைத்து மல்லாந்து படுக்கச் செய்து, தூக்குக் கட்டிலில் தான் கொண்டு செல்ல வேண்டும்.

6.4. தூக்கும் கட்டில் தொங்குக் கட்டிலாக இருக்கக் கூடாது. தூக்கும் கட்டில் விறைப்பாக உறுதியானதாக இருக்க வேண்டும். குறைந்தது 6 பேர்களாவது உதவிக்கு இருக்க வேண்டும்.

கீழே கிடப்பவரைத் தொட்டிலுக்குத் தூக்கி வைக்கும் பொழுது, அவரது உடம்பை விறைப்பாக இருக்கும்படிச் செய்தே தூக்க வேண்டும். *

6.5. அவ்வாறு அலுங்காமல் குலுங்காமல் தூக்கி வைக்க, குறைந்தது 6 பேர்களாவது இருக்க வேண்டும். ஒருவர் தலையையும் கழுத்தையும் தாங்கிப் பிடித்துக் கொள்ள, ஒருவர் கால்களை ஏந்திப் பிடித்துக் கொள்ள, 4

.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/123&oldid=690930" இலிருந்து மீள்விக்கப்பட்டது