பக்கம்:நலமே நமது பலம்.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


122 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

பேர்கள் பக்கத்திற்கு இருவராக நின்று கால்களையும் உடம்புப் பகுதியையும் தாங்கிப் பிடிக்க, மெதுவாகத் தூக்கி, தூக்குக் கட்டிலில் வைத்து, செல்லும் வழிகளில் கூடக் குலுக்கலின்றி மென்மையாக எடுத்துக் கொண்டு போக வேண்டும்.

7. பலதரப்பட்ட உள் காயங்கள்

7.1 மிகவும் அவசியம், அவசரம் என்றாலொழிய, காயம் பட்டவரை எடுத்துச் செல்ல வேண்டும் என்று முயற்சிக்கவே கூடாது. -

7.2. அப்படித் தூக்கிக் கொண்டு சென்றாக வேண்டும் என்று கட்டாய சூழ்நிலை ஏற்பட்டால், தூக்கும் கட்டிலில்தான் ஆட்டாமல் அசைக்காமல் குலுக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்.

7.3. காயம்பட்டவர் மேல் பரிதாபப்பட்டு, போகின்ற வழியில் அவருக்குக் குடிக்கத் தண்ணிரோ, உண்ண உணவோ மற்ற பானம் எதுவுமே தரக்கூடாது.

விபத்துக்களின் போது ஏற்பட்ட காயங்களையும், விபரீதமான முறையில் ஆட்பட்டவர்களுக்கு எப்படி முதலுதவி செய்வது என்பதையும் இதுவரை தெரிந்து கொண்டோம். முடிந்தவரை, புரிந்தவரை முயலுங்கள், உதவுங்கள்.

பத்திரமான இடம் வீடு என்று போற்றிப் பேசுவார்கள். அங்கும் நமக்கு ஆபத்துக்கள் உண்டு. விபத்துக்களும் உண்டு என்று நமக்குத் தெரியும். எவை, எங்கே, எப்படி, ஏனென்று கேட்கும் பல கேள்விகளுக்குரிய விடைகளைத் தொடர்ந்து இங்கே காண்போம்.