பக்கம்:நலமே நமது பலம்.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் 127

வைத்துக் காப்பதும் மிகமிக அவசியமான தற்காப்பு முறைகளாகும். -

/4.4. மூச்சுத் திணறலால் விபத்துக்கள்:

14.4.1. விறகு மற்றும் கரி அடுப்பு எரிப்பவர்கள், புகை மூட்டம் அதிகமாகி அதனால் மூச்சுத் திணறல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

14.4.2. குழந்தைகள் போர்வை மற்றும் பெரிய துணிகளால் முகத்தை மூடித் தூங்கும்போது, மூச்சுத் திணறல் ஏற்படாமல் பார்ப்பது நல்லது.

14.4.3. உண்ணும்போது உணவு தொண்டைக்குள் சிக்காமல், விக்கல் ஏற்படாமல் பார்த்து உண்ணச் செய்ய வேண்டும், உணவூட்டவேண்டும், உண்ணவும் வேண்டும். என்னென்ன விதத்தில் இடர்கள் ஏற்படும்? விபத்துக்கள் விளையும்? என்று தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. அதற்கான முன்னெச்சரிக்கை செயல்பாடுகளும் வேண்டும். அவற்றையும் மீறி விபத்துகள் ஏற்பட்டால், தடுத்தும் தவிர்த்தும் கொள்வதுடன், தகுந்த முதல் உதவிக்கான பொருட்களையும் வீட்டில் கைவசம் வைத்திருப்பது சாலச் சிறந்த பாதுகாப்பு முறையாகும்.

/4.5. வீட்டில் இருக்க வேண்டிய முதலுதவிப் பொருட்கள்:

14.5.1. கூர்மழுங்கிய கூர் முனையற்ற கத்திரிக்கோல். 14.5.2. தர்மா மீட்டர். 14.5.3. par(5561 (Safety Pins).

14.5.4. பேட்டரி லைட் (செல் போட்டுத் தயார் நிலையில்).