பக்கம்:நலமே நமது பலம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் - 11

எந்த முதலாளியும் முன் வருவதில்லை. அவனை ஏற்றுக் கொள்வதும் இல்லை.

எனவே, எந்த முனையிலிருந்து நாம் நினைத்துப் பார்த்தாலும், உடல் நலமே வாழ்வின் உன்னத நலமாக விளங்குவதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. நலமும் சுகாதாரமும்:

நலம் (Health) என்பது வயலில் வேளாண்மை செய்து, பெறப்படுகிற விளைச்சல் போன்றது. சுகாதாரம் (Hygiene) என்பது விளைச்சலை மேற்கொள்ளும் முயற்சிகள், வழிமுறைகள், வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் என்பதாக நாம் கூறலாம்.

சுகாதாரம் என்பது, நலமான வாழ்க்கையை நயம்படப் பெறச் செய்யும் விஞ்ஞானம் என்றும் நாம் விளக்கம் கூறலாம்.

சுகாதார வழியை சுயமாக ஏற்றுக் கொண்டு, நயமாகப் பின்பற்றுகின்றவர்களுக்கே நலம் என்பது சேர்கிறது. இப்படிப்பட்ட இனிய வழிமுறைகளை - உபாயங்களைத்தான் நாம் இனிவரும் பகுதிகளில் விரிவாக அறிந்து கொள்ளப் போகிறோம்.

இல்லமும் சமுதாயமும்:

நாடும் வீடும் பலமான குடிமக்களையே எதிர்பார்க் கிறது. பலமான மக்களை உருவாக்கவே பெரும்பாடு படுகிறது. தொட்டிலிலிருந்து சுடுகாடு செல்லும் வரைக்கும் சுகாதாரப் பழக்கவழக்கங்களைக் கற்பித்தல், அவற்றைக் கட்டாயப்படுத்தி மேற்கொள்ளச் செய்தல் போன்ற முயற்சிகளையே மேற்கொள்கின்றது.

வீட்டில் பெற்றோரிடமிருந்து தோன்றுகிற இந்த சுகாதாரப் பழக்கமும் பயிற்சியும், பள்ளிகளில் ஆசிரியப் பெருமக்களால் மேலும் மேலும் வலியுறுத்திக் கற்பிக்கப்படு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/13&oldid=690937" இலிருந்து மீள்விக்கப்பட்டது