பக்கம்:நலமே நமது பலம்.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


128 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

14.5.5. தோல் அரிப்பு, எரிச்சலைத் தடுக்கும் மருந்து (Lotion).

14.5.6. சிறு காயங்களுக்குத் தடுப்பு மருந்து (Antisepticcream). - -

14.5.7. வயிற்றுப் போக்கு, வயிற்று வலி போன்ற வயிற்று நோய்களைத் தற்காலிகமாக நிறுத்தும் மாத்திரைகள்.

14.5.8. வலியை நிறுத்தும் வலி நிவாரண மாத்திரைகள்.

14.5.9. தொண்டைப் புண்ணைப்போக்கும் மருந்துகள்.

14.5.10. பயணத்தின்போது ஏற்படும் வலி, மற்றும் நோய்களுக்கான மாத்திரைகள்.

14.5.11. கட்டுப் போடுவதற்கான கட்டுத் துணிகள் (Bandages). -

14.5.12. பஞ்சு, மற்றும் 2 அங்குல பேண்டேஜ் துணிகள்.

இவை போன்ற மருந்துகள் மாத்திரைகள் போன்ற வற்றை அவசரத் தேவைக்காக வாங்கி வைத்திருக்கலாம். முதலுதவிக்காகத்தான். ஆனால், மருத்துவரின் ஆலோசனை களையும், அவ்வப்போது கேட்டுத் தெரிந்து வைத்திருப்பதும் ஏற்படும் விபத்துக்களை எளிதாகச் சமாளிக்கவும் உதவும்.'