பக்கம்:நலமே நமது பலம்.pdf/132

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


130 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

இன்ஃப்ரேக்ஷன் என்பது இரத்தஓட்டம் வழங்கலானது. உடல் திசுக்களுக்கு சரிவர கிடைக்காமல் தடைப்பட்டுப்

போகிறபோது அந்தத் திசுக்கள் திக்கித் திணறி இறந்து போகின்றன என்பதாகும்.

இவ்வாறு இரத்த ஓட்டம் தடைப்படுவதற்குக் காரணம், ஒன்று இரத்தம் உறைந்து போவதாகும் (Blood Clot). இரத்தத்தை ஏந்திச் செல்லும் இரத்தக் குழாய் பழுதுபட்டுப் போகிறபோதுதான் இரத்தம் கட்டியாகி உறைந்து போகிறது.

மற்றொன்று, வேறொரு இரத்தக் குழாயில் இரத்தம் உறைந்து தடை ஏற்படுகிறபோது, இதயத் தசைகளுக்கும் இரத்தம் போகாமல் தடைப்படுவதாலும் உண்டாகிறது.

இவ்வாறு இரத்தம் உறைவதானது எந்தப் பகுதியில் ஏற்படுகின்றதோ, அந்தப் பகுதிதான் பாதிப்புக்குள்ளாகி விடுகிறது.

இதயத் தசைகளுக்கு இரத்தம் கிடைக்காமல் பாதிக்கப் படுகிறபோது உண்டாகும் அறிகுறிகள், சாதாரணமாக

செரிமான சக்தி குறைவுபடுவதிலிருந்து, கடுமையான வலிகள் வரை தொடர்ந்து வரும்.

இடது மார்புப் பகுதியிலிருந்து தொடங்குகிற வலியானது இடது கை, கழுத்துப் பகுதி, தோள் பகுதிகள் முதுகுப் பகுதிகள் மற்றும் முகவாய்த் தாடைப் பகுதி வரை படர்ந்து கொண்டே போகும்.

இதற்கு மிதமான தாக்குதல் (Milderform) என்று பெயர்.

இவ்வாறு பல பகுதிகள் பாதிக்கப்படுகிறபோது, வாந்தி மற்றும் வாந்தி எடுக்கும் உணர்வு வியர்வை அதிகமாக