பக்கம்:நலமே நமது பலம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 137

16. கடுமையான மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு

1. கடுமையான மாரடைப்புக்கான அறிகுறிகள் பற்றி உங்களுக்கு நன்கு தெரியும்.

அவ்வாறு அறிந்து கொண்ட உடனேயே, அவரைத் தரையில் படுக்க வைத்திட வேண்டும். முகம் மேற்புறமாகப் பார்த்திருப்பதைபோலவே கிடத்திட வேண்டும்.

2. படுத்திருப்பவரின் இடது பக்கம் முழங்காலிட்டு அமர்ந்து, உமக்கு வலிமையுள்ள வலது உள்ளங்கையை அவரது இதயப் பகுதிக்கு மேலே வைத்து, அந்த வலதுகையின் மேற்பகுதியில், உமது இடது கையை வைத்து அழுத்தவும். உமது வலது கையின் (உள்ளங்கையின்) அடிப்பகுதி (மணிக்கட்டுக்கு அருகில் உள்ள) படுத்துக் கிடப்பவரின் மார்பெலும்புக்கு அருகில் இருப்பதாக வைத்துக் கொள்ளவும்.

3. இப்படி முழங்காலிட்டு இரண்டு கைகளையும் இடப்புற மார்பில் வைத்து, கைகளை விறைப்பாக நீட்டியிருப்பது போல் வைத்து, மர்பு எலும்புப் பகுதியினைக் கைகளால் அழுத்த வேண்டும். மார்பு எலும்புக்கு எதுவும் இடர் ஏற்படாமல், ஊறு நிகழாத வண்ணம், 1.5 அங்குலம் முதல் 2 அங்குலம் வரை மார்பு அழுந்துவதுபோல அழுத்தவும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/139&oldid=690947" இலிருந்து மீள்விக்கப்பட்டது