பக்கம்:நலமே நமது பலம்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


12 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

கின்றன. அங்கு வளர்கின்ற இந்த உடல்நல அறிவும், சுத்தமும் சுகாதாரமும்தான் அவர்கள் பெரியவர்களா கியபோது, சமுதாயத்தால் கட்டிக் காக்கப்பட்டு, எழுதாத விதிகளாக, நடைமுறையில் ஏற்படுத்தப்பட்ட சட்டதிட்டங் களாக ஆகிவிடுகின்றன. -

ஆசிரியர்களின் அரிய பணியும், அவரவர் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்கிற சிறந்த அக்கறையுமே, ஒருவரை சுகாதாரம் மிகுந்தவராக ஆக்குகிறது. நலமான உடலில்தான் நலமான மனம் இருக்கும் என்ற பழமொழியை விளக்கும் வகையிலேதான் சுகாதார சட்ட திட்டங்கள் அமைந்திருக்கின்றன.

இனி, உடல்நலம் காக்கும் வழிமுறைகள் எந்தெந்த வகையில் அமைந்திருக்கின்றன என்பதை இங்கே காண்போம்.

1. சரிசமவிகிதத்தில் அமைந்த சத்தான உணவு; அதுதான் உன்னத வளர்ச்சிக்கும், உயர்ந்த எழுச்சிக்கும் உதவுகின்றது என்ற உண்மைநிலை.

2. சுத்தமான குடிநீர், தூய உயிர்க் காற்று, ஓய்வு, உடற்பயிற்சி, பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் அமைதியான ஆழ்ந்த உறக்கம் போன்ற வகைகள்.

3. புகைத்தல், மது குடித்தல், போதைப் பொருட்களை உட்கொள்ளுதல் போன்ற தீய பழக்கங்களைத் தள்ளிப் புறம்போக்கி நிற்கும் தனித்திறமை.

4. நோய்களை வருந்தி அழைக்கின்ற தூய்மையற்ற செயல்கள், அறிவற்ற அணுகுமுறைகள், நாகரிகக் கோமாளித் தனங்கள் போன்ற வேண்டாத வழிகளைத் தவிர்த்து, வளம் சேர்க்கிற வழிமுறைகளைக் கடைப்பிடித்து, வாழ்வாங்கு வாழ்கிற கருத்துக்களையெல்லாம், இனி வரும் பகுதிகளில் விரிவாகக் காண்போம்.