பக்கம்:நலமே நமது பலம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

இவ்வாறு ஒவ்வொரு 15 முறை அழுத்தியும் விட்டும் செய்த பிறகு, அவருக்குச் செயற்கைச் சுவாசத்தின் மூலம் உயிர் ஊட்ட முயலவும்.

4. இதய மேற் பகுதியை அழுத்தி விடச் செய்வதுடன், செயற்கைச் சுவாச முறையைச் செய்ய நேரிடுகிறபோது உதவி யாளர்கள் இரண்டுபேர் தேவைப்படுகிறது.

படுத்திருப்பவரின் இடதுபுறம் மண்டியிட்டு அமர்ந்து மார்புத் தசைகளை அழுத்தி விடுகிறபோது (Compress), படுத்திருப்பவரது வலதுபுறமாக இருந்து, அவரது தலையை, பின்புறமாகச் சாய்த்து, அவரது மூக்கைப் பிடித்து நுரையீரலுக்குள் காற்றுப் புகுவது போல ஊதவும்.

இப்படி இருவரும் இணைந்து செயல்படுவது 15 வினாடிகள். ஒரு சுற்று என்பதாகக் கணக்கிட்டுள்ளனர்.

சுவாசம் தந்து உயிர்ப்பிக்கும் பணியாற்றுகிற மற்றவர் இரண்டு தடவையாவது சுவாசத்தை உள்ளே இட்டு நிரப்பும் பணியைச் செய்ய வேண்டும். இருவரும் அந்த இருதயம் இயற்கையாக இயங்குகிற நிலைமை ஏற்படுகிறவரைக்கும் தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டும். அத்தகைய முயற்சியை மருத்துவர் வரும்வரை தொடர்வது நல்லது.

  • R.

95ubgcol-ul- (HeartBlock), ousto (Heart burn), இதயத்துள் துளை விழுதல், இதயம் சுற்றிய பகுதிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/140&oldid=1006403" இலிருந்து மீள்விக்கப்பட்டது