பக்கம்:நலமே நமது பலம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

இரத்தமும் கிடைக்கவில்லை என்றால் நான்கு அல்லது 6 நிமிடங்களுக்குள் அவர் இறந்து போகிறார்.

ஆகவே, இரத்த ஓட்டம் தடைபட்டு விடுகிறபோது, செயற்கை சுவாச முறையை உடனே தொடங்கிவிட வேண்டும். அவர் அவராகவே சுவாசிக்கிற நிலை உருவாகிற வரை, இம்முறையைத் தொடர வேண்டும். அல்லாவிடில், மருத்துவர் சேவை அவருக்குக் கிடைக்கும் வரையிலாவது கவனமாக அவரைக் கண்காணித்துக் கொண்டு வர வேண்டும்.

செயற்கை சுவாச முறை இரு வகைப்படும்.

1. Gumul@ 61sul 2 ultill 1 (peop (Mourth to mouth resuscitation). -

2. வாய், மூக்கு மூலம் உயிர்ப்பு முறை (Mouth to Nose). 7. /. வாய்க்கு வாய் உயிர்ப்பு முறை:

விபத்து மூலம்: முகம் பாதிக்கப்பட்டு இருந்தால், வாய் மூலம் சுவாசத்தை எழுப்புவது என்பது முடியாத காரியம். ஆனாலும் வாய்க்கு வாய் சுவாசமுறைதான் பாதுகாப்பான முறையாகும்.

முதலுதவி செய்பவர், பாதிக்கப்பட்டவரின் உடலை ஒரு குலுக்கு குலுக்கி நீங்கள் சரியாக இருக்கிறீர்களா? உங்களுக்கு உதவி செய்யப் போகிறேன் என்று கேட்பது நல்லது. அப்படிக் கேட்பது அவர் நினைவுடன் இருந்தால், ஏற்படப்போகிற சுவாச முறையைக் கண்டு பதறிப் போகாமல் அல்லது பதட்டப்படாமல் இருக்க நிறைய வாய்ப்பு உண்டு.

பாதிக்கப்பட்டவரைப்படுக்க வைக்கும்போது, முகத்தை மேல்புறம் பார்த்திருப்பது போல வைத்து, தரையின் மேல் வசதியாக இருப்பது போல் இருத்திட வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/142&oldid=690951" இலிருந்து மீள்விக்கப்பட்டது