பக்கம்:நலமே நமது பலம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

நன்றாக மூச்சை நீங்கள் ஆழ்ந்து இழுத்துக் கொண்டு, உங்களது வாயைப் பாதிக்கப்பட்டவரின் வாயில் வைத்து அழுத்தியபடி, அவரது மார்புப் பகுதி உயர்வது போல, உங்களது வாய் மூலம் காற்றை உள்ளே ஊதிவிட வேண்டும். 7.1.5. இவ்வாறு காற்றை உள்ளே ஊதி, அவரது நுரையீரலை நிரப்பியவுடன், அவரது வாயிலிருந்து உங்கள் வாயை எடுத்து விட்டு, அவரது மார்பு அசைவைக் கவனியுங்கள். எதிர் பார்த்த அளவு இல்லையென்றால், மேலும் ஒரு ஆழ்ந்த சுவாசம் இழுத்து அவரது வாய்க்குள் சுவாசியுங்கள். இப்படியாக 1 நிமிடத்திற்குள்ளாக 12 தடவை செய்யுங்கள்.

குழந்தைகள் என்றால் நிமிடத்திற்கு 20 தடவை காற்றை நிரப்பும் முயற்சியில் இடுபடலாம். ஆனால் இதுபோல ஆழ்ந்த சுவாசம் கூடாது.

7.1.6. இத்தகைய முயற்சியினால் அவரது சுவாசம் திரும்பிவிட்டால், மல்லாந்து படுக்க வைத்த நிலையில் இருந்து குப்புறப் படுக்க வைத்திட வேண்டும். அதன் பிறகு அவரது சுவாசிக்கும் தன்மையைக் கூர்ந்து பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அவரது சுவாசிக்கும் தன்மையைக் கூர்ந்து கவனிப் பதுடன், அவரது நாடித்துடிப்பைப் பரிசோதித்துப் பார்க்கவும். மருத்துவ உதவி அவருக்குக் கிடைக்கும் வரை அல்லது மருத்துவர் வந்து சேரும்வரை நீங்கள் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

7.1.7. சிறு குழந்தைகள் அல்லது சிறுவர் சிறுமியாக இருந்தால், வாய் மற்றும் மூக்குப் பகுதியில் வாயை வைத்து முன்பு விளக்கியவாறு காற்றை உள்ளே ஊத வேண்டும். இந்த முறையையும் சற்று விரிவாகக் காண்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/144&oldid=690953" இலிருந்து மீள்விக்கப்பட்டது