பக்கம்:நலமே நமது பலம்.pdf/146

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

7.3.3. மல்லாந்து படுக்க வைத்து, காலை விரித்து வைத்து, அவரது தொடைகளை அழுத்தியபடி அமர்ந்து, படுத்திருப்பவர் அடிவயிற்றில் (முன்பு மார்புப் பகுதியை அழுத்த கைகளை வைத்தது போல) உள்ளங்கை படும்படி வலது கையை வைத்து, அதன் மேற்புறம் இடது கையை வைத்து, துரித கதியில் ஆனால் பாதிப்பு ஏற்படாத வகையில் அழுத்த வேண்டும்.

மார்பு எலும்புகளுக்கு எதுவும் ஊறு நேரா வண்ணம் பார்த்துக் கொள்ளவும். வயிற்றைப் பிசைவது போல அழுத்திச் செய்கிறபோது, உள்ளே அடைத்திருக்கும் ஏதாவது ஒன்று விடுபட்டு வெளியேறி சுவாசம் ஏற்பட வழிவகுத்து விடும். மிகவும் கவனமாகச் செய்யவும். குழந்தைகள் என்றால் இன்னும் கவனம் வேண்டும். இப்படியாக செயற்கை முறையில் சுவாசம் ஏற்படுத்திட முயற்சி செய்து உதவலாம்.