பக்கம்:நலமே நமது பலம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 145

17. கடுவெயில் மயக்கநிலை

(Sunstrocke) --

இதை வெப்பத்தால் ஏற்படும் மயக்கநிலை என்றும் கூறுவார்கள். சூரியக் கதிர்களால் தாக்கப்பட்ட தேகத்தின் அதிக வெப்ப அளவும், அதனால் எழுந்த வியர்வைக் கசிவின் உட்தாக்கமும் கொடுத்த, கடுமையான சூழ்நிலையால் ஏற்படுகிற மயக்கமாகும் இது.

இப்படி ஏற்படுகின்ற மயக்கநிலை, மிகவும் ஆபத்தானதாகும். அதிசீக்கிரம் எடுக்கின்ற மருத்துவ சேவையால் மட்டுமே இதற்குத் தகுந்த பரிகாரம் கிடைக்கும். பாதிப்பும் நீங்கும்.

வெப்பக் கதிர்களால் சூரியன், பூமியைத் தாக்குகிற போது, பூமியில் வாழ்கிற மனிதர்களது தேகமானது கொப்பளித்தல் போய்; தங்களது தேகத்தின் இயல்பான வெப்பநிலையைக் கட்டுப்படுத்த இயலாமல், ஒழுங்குபடுத்த முடியாமல் போய்விடுவதுதான் முதல் காரணம். -

உடலின் வெப்பநிலையானது கொஞ்சங் கொஞ்சமாக உயராது திடீரெனத் தாக்கப்படுவதால், உடலின் நிலைக்குப் பல தாக்கங்கள் ஏற்பட்டு விடுகின்றன.

8.1. தலைவலி, பலஹlனத்தை உணர்தல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் முதலில் தோன்றி ஆரம்பமாகி ஓர் எச்சரிக்கையை விடுக்கின்றன.

8.2. அதனைத் தொடர்ந்து குழப்பமான மனநிலை 61sbuGlpg (Mental confusion).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/147&oldid=690956" இலிருந்து மீள்விக்கப்பட்டது