பக்கம்:நலமே நமது பலம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 13

2. நலமும் நாமும்

உடல்நலம் என்றால், உடல் வளமாக இருக்கும் ஓர் உன்னத நிலை என்றுதான் எல்லோரும் சொல்லுகின்றார்கள்.

நோய்களுக்கு ஆட்படாமல், உடல் வாழ்கின்ற தன்மைக்கும் இதுபொருந்தும் என்று எல்லோருமே நம்புகின்றார்கள்.

இப்படிச் சொல்வது உடல்நலத்திற்குச் சரியான விளக்கம் அல்ல.

உடல்நலம் என்பதற்கு எத்தனையோ விளக்கம் தந்தாலும், எப்படியோ பொருள் கூறினாலும், அது பொருந்தி வருவதில்லை. ஏனென்றால், நாம் எல்லோரும் உடல்நலம் என்ற சொல்லுக்குரிய, உண்மையான அர்த்தத்தின் அருகில்கூட போகாமலேயே பேசிக் கொண்டிருக்கிறோம்.

உலக வரலாற்றில், மனித உடல் நலம் என்பதானது, மின்னல் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிற அறிவியல் துறையாக அமைந்திருக்கிறது.

விஞ்ஞானமோ, மனித தேகத்தை அணு அணுவாகப் பிளந்து அறிவாற்றலுடன் நுழைந்து, அதிசயங்களையும் ரகசியங்களையும் அகிலமே வியக்கும் வண்ணம் பிரமிக்கத் தக்க வகையில் படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது.

உடலை ஒடுக் கவரும் நோய்கள் ஒவ்வொன்றின் தொடக்கம், கடுமை, முடிவு என்பனவற்றையெல்லாம், விஞ்ஞானம் தெளிவாக விளக்குகின்ற தேர்ச்சியைப் பெற்றிருப்பதால், நோய்களை அடக்கவும், தீர்க்கவும் கூடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/15&oldid=690959" இலிருந்து மீள்விக்கப்பட்டது