பக்கம்:நலமே நமது பலம்.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


15O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

வண்ணம் மயக்கம் ஏற்படுகின்ற சூழ்நிலைகளும் உண்டு. @g5bG 916"TITIMGeosis srs (Anaphylactic shock) 6T6rgy! பெயர்.

உடல் விரும்பாத ஒன்று உடலில் உள் நுழைகிறபோது, அப்படிப்பட்ட மாற்றம் மயக்க ரூபத்தில் வந்து விடுகிறது.

டாக்டர் ஒருவர் நோயாளிக்கு ஊசி ஒன்று போடுகிறார். அந்த மருந்து அவருக்கு ஒத்துக் கொள்வில்லை யென்றால் அவர் உடனே மயக்கமடைந்து விடுகிறார். அல்லது ஏதாவது ஒரு விஷப் பூச்சி கடித்து விடுகிறபோது அதைத் தாங்காமலும் சிலர் மயக்கமடைந்து விடுகிறார்கள்.

அந்நியப் பொருட்களை உடலுக்கு ஏற்காத நிலையில் மயக்கமடைந்து விடுகிறவர்கள், மிகவும் பலஹlனமாகவும் வெளுத்துப் போன முகத் தோற்றம் உள்ளவர்களாகவும் காணப்படுவார்கள்.

அத்துடன், அவர்கள் விடுகிற சுவாசம் கர் முர் என்ற ஒலியுடன் வந்து போகும் (Wheezy). அதனைத் தொடர்ந்து அவரது தொண்டையின் உள்பாகமும் வீங்கிப் போய்விடும். மேலும், இரத்த அழுத்த நிலையும் குறைந்து கொண்டே

வரும.

பாதிக்கப்பட்டவர் வாந்தி எடுப்பார்கள். மலஜலம் கூட அவரை அறியாமலே வெளியேறி வரவும் செய்யும். இப்படிப்பட்ட உடல்நிலை மாற்றத்தால் அவர் மூர்ச்சையாகி மயங்கி விடுவது மட்டுமல்ல மரணமடைந்து விடவும் வாய்ப்புகள் நிறைய உண்டு. இந்த அவல நிலை, உடனே திடீரென்று ஏற்பட்டு விடக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகமாகவும் நேர்ந்து விடுவது உண்டு.