பக்கம்:நலமே நமது பலம்.pdf/153

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் 151

இதற்கான முதலுதவியானது, அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துவிட வேண்டியதுதான்.

கடும்வெயிலில் மயக்கமடைந்தவர் அதிகமாகப் பயந்து போய், தன்னம்பிக்கையற்றவராக, பலகீனமுள்ளவராகக் காணப்படுவர். அவருக்குத் தாகம் அதிகமாகவே இருக்கும். சில சமயங்களில், அவருக்கு வாந்தியும் ஏற்படக்கூடும். அவரது தோல் வெளுத்துக் காணப்படுவதுடன், வெப்பம் குறைந்து சில்லென்றும் ஈரமானதாகவும் இருக்கும். அவரது சுவாசம் ஒழுங்கற்றதாக, மெல்லியதாக இருப்பதுடன், வேகமான நாடித்துடிப்பும் இருக்கும் என்பதையெல்லாம் மனதில் கருத்தாகக் கொண்டுதான், முதலுதவிப் பணியைத் தொடர வேண்டும்.

கழுத்து, மார்பு, வயிற்றுப் பகுதிகளில் உள்ள உடைகள் இறுக்கமானதாக இருந்தால், முதலில் அவற்றைத் தளர்த்திட வேண்டும்.

அவரைக் குளிர்ந்த நிலையில் இருந்து, உஷணமான உடல்நிலைக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அதற்காக் கம்பளிப் போர்வையை அல்லது கனமான ஒரு போர்வையை, சால் வையைப் பயன்படுத்

தினால் போதுமானது.

உஷணப்படுத்த வேண்டும் என்பதற்காக, வலிந்து அவரது உடம்பை அழுத்திப் பிடித்து, மசாஜ் செய்ய முயற்சிக்கக் கூடாது. ஏனென்றால், அதுவே அவருக்கு ஆபத்தை உண்டாக்கிவிடவும் கூடும். உதவப்போய் உபத்திரவம் செய்துவிடக் கூடாதல்லவா? அதற்குள்ளாக அவசரமாக ஒருவரை அனுப்பி, வைத்தியரைக் கொண்டு வர ஏற்பாடு செய்து விடவும்.