பக்கம்:நலமே நமது பலம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

2. பாதிக்கப்பட்டவர், மயக்கமடைந்தாலும், விழிப்பாக (Conscious) இருக்கிறார் என்றால், மல்லாந்து படுக்க வைத்து, முகத்தை நேராக மேலே பார்ப்பது போல இருத்தி, அவரது இரண்டு கால்களும் கொஞ்சம் உயரமாக இருப்பது போல அமர்த்தி விடவும்.

3. முகம், மார்பு, அடிவயிறு போன்ற உடல்பகுதிகளில் ஏதாவது காயம் ஏற்பட்டிருந்தால், தோல் பகுதிகளைச் சற்று உயரமாக வைத்திருப்பதுபோல, படுக்க வைக்கவும். அதே சமயத்தில் தலையை ஒரு பக்கமாக சாய்த்திருக்க வேண்டும்.

4. கடுமையான காயங்கள், தீக்காயங்கள், இரத்தக் குழாய்களின் சிதைவால் இரத்தப்போக்கு, மாரடைப்பு, தொற்று நோய்கள், விஷத்தால் ஏற்பட்ட விபத்து, சுவாசக் கோளாறுகள், அதிகமாக உட்கொண்ட இன்சுலின் மருந்துகள் அல்லது வேறுபல மருந்துகள் மூலமாக, மயக்கம் ஏற்படுவதுண்டு.

மேற்கூறிய காரணங்கள் கடுமையாக இருந்தால் விளைவுகளும் கடுமையாகவே இருக்கும். ஆகவே, காரணங்கள் மற்றும் காரியங்களின் தன்மையைக் கூர்ந்து கவனித்துத் தெரிந்து கொண்ட பிறகு, பாதிக்கப்பட்டவரின் தன்மையையும் புரிந்து கொண்டு, அதற்கேற்ப உங்கள் உதவியைத் தொடர வேண்டும். ஆகவே உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அனுப்பி விடுவதே சாலச் சிறந்த முறையாகும். - -

5. காயம்பட்டவரை அல்லது பாதிக்கப்பட்டவரை அப்புறப்படுத்த நினைத்து, அநாவசியமாக இடம் மாற்றி இழுத்து அலைக்கழிக்கக் கூடாது. பொதுவாகப் பாதிக்கப் பட்டவரைக் கால்கள் சற்று உயர்த்தி இருப்பது போல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/154&oldid=690964" இலிருந்து மீள்விக்கப்பட்டது