பக்கம்:நலமே நமது பலம்.pdf/156

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


154 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

19. மயக்கமடைதல்

(Unconsciousness)

ஒருவர் மயக்கம் அடைந்து விடுகிறார் என்றால், அவரது மூளையின் இயற்கையான செயல்பாடுகளுக்குத் தடை ஏற்படுகிறபோதுதான் நிகழும். இப்படி மூளையின் இயற்கையான இயக்கத்தில் இடைஞ்சல் ஏற்படுகிறபோது, மந்தமான குறைதூக்கம் போல சோம்பலான நிலை ஏற்படும். அதைத் தொடர்ந்து மீளாத மயக்கநிலையும் (Coma) விரைந்து ஏற்படவும் கூடும்.

நல்ல உணர்வுத்தன்மை இல்லாத நிலை ஏற்பட்டு, சில உந்துதல்கள் (Stimulation) மூலமாக மீண்டும் வருகிற மயக்கநிலையும் உண்டு. எந்த உந்துதல்களையும் ஏற்றுச் செயல்பட முடியாத, பெருமயக்க நிலையும் உண்டு.

கோமா என்கிற பெருமயக்க நிலையானது மிகவும் கடுமையான பாதிப்பாகும். இது தொடர்ந்து நீடித்திருக்கிற

மயக்க நிலையாகும்.

தலையில் ஏற்படுகிற படுகாயங்கள், அதிர்ச்சிகள், மது அல்லது போதை மருந்துகளினால் ஏற்படுகிற பாதிப்புகள், முற்றிய வலிப்பு நோய்கள், சில சமயங்களில் நீரிழிவு நோய், கல்லீரல் கோளாறுகள், சிறுநீர் கழிவுகள் போன்றவற்றின் மூலமாகவும் பெரு மயக்கம் ஏற்பட்டு விடுகிறது.

சுவாசம் தங்கு தடையின்றிப் போய் வருமாறு குப்புறப் படுக்க வைத்திருந்துவிட்டு, உடனே மருத்துவமனையில் சேர்ந்து விடுவதுதான் சிறந்த புத்திசாலித்தனமான உதவியாகும்.