பக்கம்:நலமே நமது பலம்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


14 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

தெளிவை மனித இனம் மிகுதியாகப் பெற்றுக் கொண்டிருக் கிறது.

ஆகவே, உடல்நலமாக வாழ வேண்டும் என்று விரும்புகிற எல்லோருமே, அறிவியல் வல்லுநர்கள் காட்டுகின்ற சுகாதார வழிகளில் நம்பிக்கையுடன் நழுவாமல் நடந்து வாழ்கிறவர்களாகவே இருக்க வேண்டும். மனத்தின் குணம்:

வாழ்க்கை என்பது வழவழப்பான பாதையல்ல. கல்லும் முள்ளும், மேடு பள்ளமும், ஏற்ற இறக்கமும் நிறைந்த பாதையாகும். -

மனிதர்கள் இந்த வாழ்க்கையைக் கட்க்க நிதம் நடத்திச் செல்ல, படுகிற பாடுகள், பதட்டங்கள், துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

மனப்பதட்டமும் (stress) உடல் வாட்டமும் (strain) மனிதர்களைத் தினம் பாடாய்ப்டுத்துகிறது. பதராய் மாற்றுகிறது.

இந்த வேலையை எடுப்பாய்ச் செய்துவிடுவது மனம் தான். நாகரிகமான சமுதாயத்தில் நலிவையும் அழிவையும் தரத்தக்க வல்லமை படைத்ததாக மனமே விளங்குகிறது. ஆசைகளைத் தூண்டிவிட்டு, அவசரங்களைத் தாண்ட விட்டு, அவலங் களை அள்ளி இறைத்துவிடுகிற ஆகாய கங்கையாகவே மனம் அலைபாய்கிறது. அதன் அகோரப்பிடியிலே சிக்கிக்கொள்கிற உடல் பெறுகிற சிரமங்கள், படுகிற அவதிகளுமே, பல்வேறு விதமான நோய்களுக்குப் பாய்விரித்துவிடுகிறது.

அதனால்தான் மனத்தின் குணத்தை மகிமை மிக்கதாக வைத்துக் கொள்ள வேண்டும். வளர்த்து விட வேண்டும் என்கிறார்கள்.