பக்கம்:நலமே நமது பலம்.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் - 159 உதவுகிற முறை:

1. சிறு மயக்கத்திற்கு உள்ளானவர் ஒருசில நிமிஷங்களில் தெளிவு பெற்றுவிட வேண்டும். 15 நிமிடங்களுக்கு உள்ளாகப் பழைய நிலைமைக்கு வந்து விட வேண்டும். அப்படி மயக்கம் தீரவில்லை என்றால், அதை மயக்கம் என்றே கருதி மயக்கத்திற்கான உதவிமுறைகளைப் பின்பற்றவும் (மயக்கம் என்ற பகுதியைக் காண்க).

2. சிறு மயக்கம் என்பது மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை என்பதால் பாதிக்கப்பட்டவருக்கு நீரிழிவு நோய் உண்டா என்று கேட்டுத் தெளியவும். அவருக்கு அந்த நோய் உண்டென்றால், அவருக்குக் கொஞ்சம் சர்க்கரை (Sugar) அல்லது இனிப்புப் பொருள்கள் (Chocklates) போன்றவை தரலாம்.

3. மயக்கம் அடைந்தவரைப் படுக்க வைக்க வேண்டும். முகம் மேற்புறமாகப் பார்த்து இருப்பதுபோல மல்லாந்து படுக்க வைக்க வேண்டும். ஆடைகளைத் தளர்த்தி விடவேண்டும். மூச்சு விட இயலாத நிலை என்றால், செயற்கை சுவாச முறையைப் பின்பற்றி விடவும். அவரின் இரண்டு கைகளை யும் அவரது உடலுக்கு அடியில் (மார்புக்கு அடியில்) நுழைத்து விட்டு, தலையை அவரது வலப்புறமாகத் திருப்பி வைக்க வேண்டும்.

4. பிறகு வலது கையை முதுகுக்கு அடியில் நுழைத்து, இடது கையை எடுத்து மார்புக்கு மேலாக வைத்து, இடது காலை முழங்காலில் மடிய மடித்து, வலது காலுக்கு இடப் புறமாகக் கொண்டு வந்து சரிகோணமாக இருப்பதுபோல வைத்து, அழுத்திக் கொண்டு மெதுவாக வலது கையை

முதுகுப் பகுதியில் இருந்து இழுக்க வேண்டும்.