பக்கம்:நலமே நமது பலம்.pdf/164

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


162 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

அவரால் எதையும் விழுங்க முடியும், உட்கொள்ள முடியும் என்ற நிலைமையில் உணர்வு விழிப்புடன் இருந்தால், அவருக்குப் பால் மற்றும் தண்ணிரைக் கொடுக்கலாம். அதற்குப் பிறகு அவசர சிகிச்சை தரும் மருத்துவர் வரும்வரை காத்திருக்க வேண்டும்.

குடித்து விட்ட அமிலம் உள்ஸ்ரீப்புக்களை அரித்து விடக்கூடிய ஆற்றலற்றதாக இருந்தால், அல்லது பெட்ரோலியப் பொருட்களாக இல்லாமல் இருந்தால் அவரை வாந்தி பண்ணவைக்கின்ற முயற்சியில் ஈடுபடலாம். ஏனென்றால் வாந்தி எடுகிறபோது மீண்டும் உணவுக்குழல் போன்றவைகள் பாதிக்கப்படும் என்பதால்தான், வேண்டாம் என்கிறோம். பாதிக்காது என்கிறபோது வாந்தி பண்ணச் செய்ய வேண்டும்.

வாந்தி வரத்துண்டுவதற்குக் கெடுதல் பயக்காத இனிய மருந்துக் குழம்பு நீரை (Syrup) மற்றும் தண்ணிரைத் தரலாம். இதுபோன்ற சிரப்புகளை மருந்துக்கடையில் வைத்தியர் தரும் சீட்டின்றியும் பெற்றுக் கொள்ளலாம்.

சிரப் கொடுத்தும் வாந்தி வரவில்லை என்றால், தொண்டையின் உட்புறத்தில் விரலால் தொட்டு அல்லது ஒரு சிறு தேக்கரண்டியை (Spoon) விட்டு வாந்தி பண்ணச் செய்ய முயற்சிக்கலாம்.

அவர் வாந்தி எடுக்கிறார் என்றால் அவரது முகத்தை முன்புறமாகத் தாழ்த்தி குனிந்திருப்பதுபோல் அமர்த்தவும், அதாவது அவரது இடுப்புப் பகுதிக்கும் கீழாகத் தலை தாழ்ந்திருப்பதுபோல் உட்காரச் செய்யவும்.

அவர் எதைக் குடித்தார் என்பது தெரிந்து விட்டால்,

அதைப் பத்திரமாக எடுத்து வைத்திருந்து மருத்துவர் வந்த பிறகு அவரிடம் கூறி, அதை ஒப்படைப்பது நல்லது.