பக்கம்:நலமே நமது பலம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t

164 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

3. கண்களில் நச்சுப் பொருட்கள் விழுந்தால்:

கண்களில் நச்சுப் பொருள் போன்றவை பட்டிருந்தால், அல்லது விழுந்து விட்டால் கண்களை மூடச் செய்யாமல் திறந்தாற்போல் வைத்திருக்குமாறு கூற வேண்டும்.

முடிந்த அளவு சுத்தமான தண்ணிரால் கண்களைக் கழுவலாம். கண்களுக்கு வேறு எந்த மருந்தையும் தடவவோ, உள்ளே போடவோ கூடாது. மருந்தும் போட முயற்சிக்கவோ கூடாது. கண் மருத்துவரிடம் கொண்டு போய்க் காட்டித்தான் மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்.

4. தோலில் விஷப் பொருட்கள் படும்போது:

தோலில் விஷப் பொருள் படும்போது அல்லது இரசாயணப் பொருட்கள் பட்டுப் புண்ணாகி விடுகிறபோது, நாம் மிகவும் எச்சரிக்கையுடன் பாதிக்கப்பட்டவருக்கு உதவி

செய்திட வேண்டும்.

தேவைப்பட்டால் அவர் அணிந்திருக்கும் ஆடைகளை அகற்றி விடுவது நல்லது. -

புண்ணாகிப் போன இடத்தில் தண்ணிரால் நனைத்துக் கழுவிடவேண்டும். தோலில் பட்ட விஷப் பொருளை நீக்கிய பிறகு, அதன்மேல் சுத்தமான துணியால் போர்த்தி விடலாம்.

இதுபோன்ற காயங்களுக்கு எந்தவிதமான மருந்தையும் தடவக்கூடாது. மற்றவிதமான முதலுதவியையும் செய்யக் கூடாது.

வீட்டில்தான் இதுபோன்ற விஷ விபத்துக்கள் நடைபெறும் என்பதால், நாம் விழிப்புணர்வுடன் எப்போதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/166&oldid=690977" இலிருந்து மீள்விக்கப்பட்டது