பக்கம்:நலமே நமது பலம்.pdf/168

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


166 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

5. விஷமான உணவுகள்:

கெட்டுப்போன உணவு, அசுத்தத் தண்ணிர் போன்ற வற்றை உண்பவர்களுக்கும் உட்கொள்பவர்களுக்கும் கடுமையான நோய்கள் ஏற்பட்டு விடுகின்றன.

ஆகவே, ஆர்வம் அதிகமாக இருந்தாலும், ஆசையும் வெறியும் வந்தாலும், கொஞ்சம் நிதானமாக இருந்து சில முக்கியமான விஷயங்களைக் கடைப்பிடித்தே ஆக வேண்டும்.

பழங்களைக் கழுவிய பிறகு சாப்பிடுவது பத்திரமான பழக்கமாகும். வேகாத உணவு வகைகள், அதிகம் வெந்ததும் அதிக நேரம் அல்லது பல நாட்களாகிய பழையதும், தூய்மையற்ற தண்ணிர் போன்றவற்றைத் தவிர்த்து விட வேண்டும். -

குடிக்கப் போகும் தண்ணிரைப் பற்றி, சந்தேகம் வந்தால் கூட அதைக் குடிக்காமல் நிறுத்துவது நல்ல பழக்கம் ஆகும்.

நன்றாகக் காய்ச்சிய குடிநீரைப் பயன்படுத்துவது நல்லது. சாப்பிடுவதற்கு முன்பாக கைகளை நன்கு அலம்புவது, தேய்த்துக் கழுவிக் கொள்வது நல்லது.

விஷத் தன்மை உள்ள உணவாகிய பொருள்களை உண்டால், வாந்தி, தலைவலி, வயிற்றலைவு, வயிற்றுப் போக்கு, காய்ச்சல் போன்ற நோய்கள் உண்டாகும்.

மேலே கூறிய நோய்களுக்கான அறிகுறிகள் ஏற்பட்டு அவை 12 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து இருந்தால், உடனே மருத்துவரை அணுகுவதும், சேர்ப்பிப்பதும் முக்கியமான கடமை என்பதை உணர்ந்தால், சமாளித்துக் கொள்ளலாம்; வெற்றிகரமாக வெளியேறலாம்.