பக்கம்:நலமே நமது பலம்.pdf/169

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் 167

22. elpG6DL–LIL (chocking)

மூச்சடைப்பு என்பது காற்று வந்து போகும் சுவாசக் குழாய்களின் வழிகளில் ஏற்படுகின்ற அடைப்பாகும்.

உணவுத் துகள்கள், சளி, சலம் மற்றும் வெளியில் உள்ள பொருள்களில் ஏதாவது ஒன்று தொண்டையில் சிக்கிக் கொள்ள, அதனால் மூச்சுக் குழல் மற்றும் காற்றுக் குழாய் (Windpipe) வழியானது அடைபட்டுப்போக, அப்போதுதான் மூச்சடைப்பும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டு விடுகின்றன.

சில சமயங்களில் கழுத்தைப் பிடித்து நெறிக்கின்ற போதும் மூச்சடைப்பு ஏற்படும்.

விஷ வாயுக்களைச் சுவாசித்து விடுகிறபோது, தசைகள் அதிர்ச்சி அடைந்து இயங்காமல் மூச்சடைப்பும் உண்டாகும்.

ஆஸ்துமா எனப்படுகிற சுவாச நோயின் கடுமையால் இருமலும் மூச்சடைப்பும் ஏற்பட்டு விடுகிறது.

மூச்சடைப்புக்கு ஆளானவர் மூச்சுவிடத் திணறுவார். அவரால் பேசமுடியாதவாறு கஷடப்படுவார். மூச்சுவிடத் திணறுவதால் இருமலும் அதிகமாகச் சேர்ந்து கொள்ளும்.

போதிய உயிர்க்காற்று கிடைக்கப் பெறாததால் மூச்சடைப்புக்கு ஆளானவரின் முகம் முதலில் கருஞ்சிவப்பு (Purple) நிறமாகி, பிறகு நீல நிறத்துக்கு வந்து விடுகிறது.

மூச்சடைப்பு நீடிப்பதால் நுரையீரல்களின் செயல்பாடும் இதயத்தின் செயலும் தடைப்பட்டு விடுவதால், பிராண வாயுவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட, மூளையும் சேதப்படுவதால், குறைந்தது 4 அல்லது 5 நிமிடங்களுக்குள் நோயாளி மரணம் அடையவும் நேரிட்டு விடுகிறது.