பக்கம்:நலமே நமது பலம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 15

நலமான மனமே, நலமான தேகத்திற்கு வழிகாட்டி என்ற நல்லுரையும், மனத்தின் குணத்தினால்தான் வந்தது, வளர்ந்தது.

விளக்கம்:

ஆகவே, நல்ல உடல்பெற நல்ல மனமும், நல்ல மனம் பெற நல்ல உடல் நலமும் வேண்டும் என்கின்றனர்.

இரண்டும் ஒன்றையொன்றைச் சார்ந்து, தேர்ந்து, இணைந்து செயல்படுகின்றன என்ற விவரமும் நாமெல்லாம் அறிந்ததே!

உலக சுகாதார நிறுவனம், உடல்நலம் என்றால் என்ன என்பது பற்றி, ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறது. அந்த வாசகம் இப்படி அமைந்திருக்கிறது.

நோயுற்ற அல்லது வலிமையற்ற நிலையில் வாழாமல்,

உடலாலும், மனதாலும், சமுதாய அந்தஸ்தாலும் நன்னிலையில் வாழ்வதையே உடல்நலம் எனக் கூறலாம்.

இப்படிக் கூறுவதனால், உடல்நலம் என்பதற்கு ஓர் அளவுண்டு, எல்லையுண்டு என்றும் நாம் கூறிவிட முடியாது. எப்பொழுதும் அதே இனிமை உணர்வுடன், வலிமையான, தரமான நிலையில் தேகத்தை வைத்துக் கொண்டு வாழ்வதுதான் வாழ்வின் இலட்சியமாக இருக்க வேண்டும் என்பதையே ஓர் அளவுகோலாகக் கொள்ளலாம்.

அப்படியானால், அதிக எடையைத் தூக்கிக் காட்டுகிற ஒருவரை, நல்ல உடல்நலம் உள்ளவர் என்று கூறிவிட முடியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/17&oldid=690981" இலிருந்து மீள்விக்கப்பட்டது