பக்கம்:நலமே நமது பலம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 171

உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறி வந்து விட

வேண்டும்.

அப்படிக் கொண்டு வரப்பட்டவரின் ஆடைகளைத் தளர்த்திவிட்டு, நன்றாகச் சுவாசிக்கச் செய்யுமாறு உதவ வேண்டும். அவரது மூச்சு நின்று போயிருந்தால், செயற்கைச் சுவாசம் மூலமாகச் செயல்படலாம். இதயத் துடிப்பு நின்றிருந்தால் மாரடைப்புக்கு செய்வது போல, இதயத்தை இயக்குகிற முறையைப் பின்பற்றி உதவலாம். -

ஆஸ்த்மாதாக்குதலில் மூச்சடைப்பு ஏற்பட்டால்

ஆஸ்த்மாவின் கடுமையான தாக்குதலால் சுவாசத்தில் தடை ஏற்பட்டு தடுமாறித் தத்தளிக்கிறபோது, அவரது இரண்டு கைகளின் எல்லா விரல்களையும் நன்கு கோர்த்துக் கொண்டு (interwine), உள்ளங்கைகளை ஒரு மேசை மீது அல்லது சுவர் மீது வைத்து அழுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

அப்படி அழுத்துகிறபோது அவரது மார்புக்கூடு விரிவடைந்து கொள்ளவே, காற்று உள்ளே புகவும் வந்து வெளியேறுகிற வாய்ப்பும் உண்டாக்கப்படுவதால், சுவாசிக்கும் வசதி சுமுகமாகக் கிடைக்கும்.

மூச்சிழுக்கும் மருந்துக் குழலை (Inhaler) பயன்படுத்திக் கொள்ளுமாறு உதவலாம். அல்லது அவருக்கு அவரது மருத்துவர் சிபாரிசு செய்திருக்கும் மாத்திரையை உட் கொள்ளச் செய்யலாம். தேவைப்பட்டால் மருத்துவரை உடனே வரவழைத்து விடலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/173&oldid=690985" இலிருந்து மீள்விக்கப்பட்டது