பக்கம்:நலமே நமது பலம்.pdf/176

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


174 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

இரத்தக் கசிவுக் காயத்திற்கான முதலுதவி:

இரத்தக் கசிவை, முடிந்தவரை தடுத்துவிட முயல வேண்டும். முகத்துக்கும் மேலே அல்லது ஒரு மூட்டுக்குப் பக்கத்தில் ஏற்படுகிற அடிபட்டதால் ஏற்படுகிற இரத்தக் கசிவைக் கட்டுப்படுத்துவது, சற்று இயலாத காரியம்தான்.

காயம்பட்டவரை அங்கும் இங்கும் இடம் பெயரச் செய்வதால் இரத்தக் கசிவு அதிகமாகிவிடும். இதனால் தோலுக்கு அடியில் மேலும் இரத்தக் கசிவு அதிகமாவதைத் தடுத்துவிட முடியும்.

அந்தக் காயத்தின் மேல் உண்டாகி இருக்கிற வீக்கத்தை ஐஸ் கட்டிகள் உள்ள ஒரு துணிப்பையினால் ஒத்தடம் கொடுக்கும்போது குறைத்து விடலாம். -

ஐஸ் கட்டி வைப்பதற்குள்ளாக, உண்டான வீக்கம் மேலும் சற்று பெரியதாகிவிட்டால், அதற்காகக் கவலைப் படாமல் வீங்கிய இடத்தில் ஒரு கட்டுப் போட்டு (Bandage) ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்கவும்.

தேவைப்படும்போது தொடர்ந்து ஒத்தடம் தரலாம். இப்படித் தருகிற ஒத்தடம் காயம்பட்ட புண்ணுக்குச் சுகமாக இருக்கும். அதாவது காயத்தின் வலியைக் குறைத்து ஓர் உணர்ச்சியற்ற நிலையை (Numbness) உண்டுபண்ணி சரி செய்து விடும். -