பக்கம்:நலமே நமது பலம்.pdf/177

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் 175

24. இரத்தப்போக்கு (Bleeding)

சிறிதளவு உடலில் இருந்து வெளியாகும் இரத்தத்தை இரத்தக் கசிவு என்கிறோம். அதிகமாகப் பெருக்எகடுத்து வருவதை இரத்தப் போக்கு என்கிறோம். அளவுதான் வித்தியாசப்படுகிறது என்றாலும், ஏற்பட்டிருக்கும் ஆபத்து எண்ணிப் பார்க்க முடியாத ஒன்று.

கத்தி முதலிய கூர் ஆயுதங்களால் வெட்டப்படுகிற போது, அல்லது கடுமையாக விபத்தின்போது காயம்படுகிற சமயத்தில், அல்லது உடம்புக்குள்ளே ஏற்படுகிற குடல் இரத்த வெளிப்பாடு எல்லாம், இரத்தப் போக்கைப் பெருக்கி விடுகின்றன.

இருமும் போது வெளிப்படுகிற சளியில் இரத்தம் வந்தால் அல்லது மலத்தில் இரத்தம் வரும்போது உடலுக்குள்ளே உண்டாகியிருக்கும் சீர்கேட்டினை அவை சுட்டிக் காட்டுவதாக அமைந்திருப்பதால், உடனே மருத்துவரிடம் செல்வது நல்லதாகும்.

எச்சலில் இரத்தம்:

எச்சில் துப்பும்போது அதில் சளியும் இரத்தமும் சேர்ந்து

வந்தால், எங்கோ சுவாசப் பாதையில் ஓரிடத்தில் இரத்தப்

போக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதாக அர்த்தம்.

நல்ல சிவப்பு நிறத்தில் மூக்கில் இருந்து, வாயிலிருந்து அல்லது தொண்டைப் பகுதியிலிருந்து (இந்த உறுப்புகளை மேற்புற சுவாசப் பாதை என்பர்), நுரையீரலிலிருந்து (இதைக் கீழ்ப்புற சுவாசப் பாதை என்பர்) இரத்தம் வெளிப்பட்டால், இதை இலேசாக எண்ணி விடாமல், உடனடியாகக் கவனித் தாக வேண்டும். காலம் தாழ்த்தக்கூடாது.