பக்கம்:நலமே நமது பலம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 177

இப்படி வாந்தி எடுப்பவர்களுக்கு மயக்கம் ஏற்படுவ துண்டு. உடல் சில்லிட்டுப் போகாதவாறு வெப்பம் தரும் போர்வையைப் போர்த்திப் படுக்க வைத்து விட்டு, மருத்துவருக்கு ஆள் அனுப்பவும். ... “

இரத்தப் போக்கு கொஞ்சமாக இருந்தால், காயத்திற்கு மேலே பேண்டேஜ் துணியால் ஒரு கட்டுப் போடவேண்டும்.

இரத்தப்போக்கு அதிகமாக இருந்தால், இரத்தக்குழாய் எது என்று தெரிந்து கொண்டு அதனை அழுத்திப் பிடித்துக் கொண்டு, இரத்தம் வரும் வேகத்தை அடைத்து இரத்தப் போக்கையும் நிறுத்திட வேண்டும். சரியாகச் செய்தால் வெளிவரும் இரத்தப் போக்கை நிறுத்தி விடலாம்.

இரத்தப்போக்கு உடலுக்குள் இருந்தால், அதற்கான அறிகுறிகளை வைத்து முதலில் என்ன, எங்கே என்று தீர்மானிக்க வேண்டும். இந்த அறிகுறிகள் உட்புற வெளிப்புற இரத்தப் போக்கு இரண்டுக்கும் பொருந்தும்.

வெளியேறிய நிறம், உடல் குளிர்ந்து போதல், ஈரப்பிசுக்குள்ள தோற் பகுதி, பலஹீனமான தோற்றம், படபடப்பான நாடித் துடிப்பு, வேகமாக பதட்டமுடைய நாடித் துடிப்பு, மெலிதான சுவாச மூச்சுப் போக்கு இப்படிப்பட்ட அறிகுறிகளை வைத்துக் கண்டு பிடித்து விடலாம்.

உட்புறத்து இரத்தப் போக்கு என்றால், அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்ட சென்றாக வேண்டும்.

உட்புற இரத்தப்போக்கால் அவதிப்படுபவருக்கு சாப்பிட உணவோ குடிக்கத் தண்ணிரோ எதுவும் தரக்கூடாது.

கத்தியால் குத்தப்பட்டிருந்தால், அந்த ஆயுதம் அவர் உடம்பிலே இருந்தால் அதை உடனே பிடுங்கிவிடக் கூடாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/179&oldid=690991" இலிருந்து மீள்விக்கப்பட்டது