பக்கம்:நலமே நமது பலம்.pdf/180

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


178 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

மார்பிலே பெரியதான காயம் ஏற்பட்டு விட்டால், அதற்குள் காற்றுப் புகாதவாறு துணியால் மூடி மறைத்து விட வேண்டும்.

காலிலோ அல்லது கருப்பையிலோ இரத்தப்போக்கு ஏறபட்டிருந்தால், கால்களை உயர்த்தி உயரமாக வைத்து அவரைப்படுக்க வைத்துவிடவேண்டும். அவருக்கு வெப்பம் உடலில் தேவைப்படுகிறது என்பதற்காக, அதிக வெப்பத்தை ஏற்படுத்தி விடக்கூடாது.

அதிகமான இரத்தப் போக்கு ஏற்பட்டு விட்டால், அவருக்கு உண்டாகிற அதிர்ச்சியின் காரணமாக, வியர்வைக் குளமாகி, தோல் பிசுக்குக்கு ஆளாக, அதனால் உடல் சில்லிட்டுப்போக, இரத்த அழுத்தத்தின் தரம் குறைய, இவற்றை எல்லாம் அருகிலிருந்து கவனித்து கண்காணித்து உதவிட வேண்டும்.

மூச்சு நின்று விடுவது போல் இருந்தால் செயற்கை

சுவாச முறையைப் பின்பற்றலாம்.

உடல் பகுதிகளுக்கு இரத்தம் ஏந்திச் செல்லும் தமணியை, அதனது துள்ளும் இயக்கத்தை அறிந்தே கண்டு பிடித்து விடலாம். தமணியின் இரத்தம் நல்ல சிவப்பான நிறமாக இருக்கும்.

அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் சிரையின் இரத்தமானது, கருஞ்சிப்பாக இருப்பதுடன், சீராக ஓடுவதிலிருந்தும் கண்டு பிடித்து விடலாம்.

முதலுதவியுடனே மனதிருப்தி அடைந்துவிடாமல் மருத்துவருக்கு ஆள் அனுப்புவது முக்கியம். மருத்துவ மனைக்குக் கொண்டு செல்வதையும் விரைவுபடுத்து வதானது மிகவும் புத்திசாலித்தனமான செயலாகும்.