பக்கம்:நலமே நமது பலம்.pdf/183

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் 181

26. பதுகாப்புக் கல்வியும் பயன்களும்

1. பாதுகாப்பு ஒரு விளக்கம்:

உயிர் உன்னுடையது. நீ காப்பாற்றிக் கொள்ள இருக்கும் உயிர், உனக்குச் சொந்தமானது. அதனால் உன் குடும் பத்திற்கு உதவு. அதுவே இந்தச் சமுதாயச் செழிப்புக்கு ஆணிவோர். அந்தச் செழுமையே நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆதாரம் என்று, தனி ஒருவனைத் தகுந்த முறையில் பாதுகாப்புடன் வாழச் சொல்கின்ற, வாழச் செய்யும் வழியைக் காட்டுகின்ற கல்விதான் பாதுகாப்புக் கல்வியாகும்.

திறமை உள்ளவர்களே உலகில் தரமாக, நிம்மதியாக வாழ முடியும் என்ற உலக நியதியின் அடிப்படையில் தோன்றியது தான் பாதுகாப்புக் கல்வி.

தூசி விழாமல் நமது கண் இமைகள் மூடிக் கொள்கின்றன. மீறி விழுந்தாலும் கண்ணிர் கரைத்தெடுத்துத் தூய்மைப்படுத்தி விடுகிறது. மூக்கிற்குள்ளே தூசி புகுந்து விடாமல் உள்ளே உள்ள பாதுகாப்பு முறை, நோய்க் கிருமிகளைக் கொல்லக் காத்திருக்கும் வெள்ளை அணுக்கள், தூங்கும் போது நிகழ்கின்ற அனிச்சைச் செயல்கள் எல்லாம் உடல் உள்ளே நிகழ்கின்ற முக்கியமான பாதுகாப்புப் பணிகளாகும்.

அந்த ஒப்பற்ற பணிகள் எல்லாம் சிறப்பாக உடலை உலவச் செய்கின்றன. பாதுகாக்கும் உளப்பாங்கை, உயர்ந்த அறிவை அப்பணிகள் நமக்கு ஊட்டுவது போல, பாதுகாப்புக் கல்வியும் நமக்காக அமைந்திருக்கிறது.