பக்கம்:நலமே நமது பலம்.pdf/185

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் 183

என்றாலும், வசதிகளுக்குள்ளேயே மறைந்து கிடக்கும் அபாயங்களையும், மக்களினம் அண்மைக் காலத்தில் அதிகமாகச் சந்திக்கத் தொடங்கியிருக்கிறது.

நாளுக்கு நாள், நிமிடத்துக்கு நிமிடம், பயங்கர விபத்துக்களும் அதிகமாகவே உண்டாகிறதே தவிர, குறைந்த பாடில்லை என்ற மனக் குமுறல் எல்லோரிடிையிலும்

எழத்தான் செய்திருக்கிறது.

ஆபத்துக்களில் அதிகம் துவளும் மனித இனத்திற்கு ஆதரவு ஊட்டவும், அதனைக் காக்கவும், அறிஞர் கூட்டம் மிகுந்த அக்கறையுடனும் முனைப்புடனும் ஆராயத் தொடங்கியது. அந்த விழிப்புணர்ச்சியின் விளைவாகப் பிறந்ததுதான் இந்தப் பாதுகாப்புக் கல்வியாகும்.

தொழில்களில் மறுமலர்ச்சி தோன்றி, தொழிற் சாலைகள் பற்பல மேலை நாடுகளில் தோன்றியதும், அதனால் நாடுகளில் புத்துணர்ச்சி பிறந்ததும் நாம் அறிந்ததே.

கி.பி. 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொழிலாளர் கள் பட்ட துன்பமும் துயரமும் அளவிலா. வேலையோ அதிகம்; கூலியும் குறைவு. தொழிலாளர் கூட்டமோ அதிகம். அதனால் வேலைக்குப் போட்டிமனப்பான்மை. தொழிலாளர் களிடையே நெருக்கடி. அந்த நிலையில், விபத்துக்கள் அதிகமாயின. போட்டி இருந்ததால் விபத்துக்கு ஆளானோர் வேலையை இழந்தனர். அந்த இடத்தில் வேறொருவர் என்று நியமிக்கப்பட்டனர்.

விபத்துக்கு ஆளானோர் வேலையும் இழந்து, கூலியும் இழந்து, மேலும் அதற்குரிய நட்ட ஈட்டுத் தொகையையும் இழந்து தவித்தனர். தொழிற்சாலை உரிமையாளர்களின் வக்கீல்களின் சாமர்த்தியத்தால், தொழிலாளர்கள் முறையீடு