பக்கம்:நலமே நமது பலம்.pdf/190

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


188 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

7. செய்கின்ற செயல் முறைகளில் குழப்பமோ, கொள்கைப் பிணக்கோ இல்லாமல், சிறப்பாகச் செய்யும் ஆற்றலைப் பெறுகின்றார்கள். -

8. அவர்களால் விபத்தின் கொடுமையை உணர முடிகின்றது. அதாவது விபத்து நேர்ந்து ஒருவர் சாகாமல் தப்பித்துக் கொண்டாலும், காலம் பூராவும் அங்கஹlனர் களாக, பார்வை இழந்தோ, பயங்கரத் தழும்பு கொண்டோ, செயற்கைக் கை கால்கள் என்று கொடுமையான வாழ்வு வாழ்வதை இளமையிலே உணர்வதால், தவிர்த்து வாழும் அறிவு தானாகவே ஏற்படுகிறது.

அத்தகைய அரிய வாழ்வையும் இனிய பயிற்சியையும் இதமாக அளிக்கின்ற பாதுகாப்பு முறைகளை, மாணவர்கள் எங்கெங்கே எவ்வெவ்வாறு பின்பற்ற வேண்டும் என்ற விதிமுறைகளையும் கட்டுக் கோப்பான வழிகளையும் இனி காண்போம்.