பக்கம்:நலமே நமது பலம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் - 189

27. சாலையில் பாதுகாப்பு

/. சாலை விபத்துக்குரிய காரணங்கள்:

சாலைகளில் நடந்து செல்வது அல்லது பயணம் போவது என்பதெல்லாம் இன்றைக்குப் பெரும் பிரச்சினைகள் நிறைந்ததாகவே இருக்கின்றன.

பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கையும் விரைந்து செல்லும் அவற்றின் வேகத்திற்குப் போதாத நெருக்கடியும் நிறைந்த சாலைகள், மேடும் பள்ளமும் சூழ்ந்த சாலைகளின் அமைப்பு, இவற்றினுடே தெரிந்தோ தெரியாமலோ செல்கின்ற பாதசாரிகள், மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள், சைக்கிள் ரிக் ஷா மற்றும் கார், லாரி போன்றவைகள் அடிக்கடி மோதிக் கொள்கின்ற நிகழ்ச்சிகள் எல்லாமே, இன்று பாதுகாப்புக் கல்வியின் தேவையை மேலும் விரிவுபடுத்துகின்றன.

பொது மக்களுக்கு இந்தப் பாதுகாப்புக்குரிய விதி முறைகள் தெரியவில்லை. வாகன ஓட்டிகளுக்கு வேகத்தைக் குறைத்துக் கொண்டு போகமுடியாத அவசர நிலை. இக்கட்டான சூழ்நிலையில், அபாய நேரத்தில், மதியூகத் துடன் நடந்து கொள்ளத் தெரியாத அச்சநிலை. எப்பொழுது வாகனத்தை வேகமாக ஒட்டுவது, எப்பொழுது பிரேக் போடுவது, எப்படிச் சமாளிப்பது என்று அறிந்து கொள்ளாத அறைகுறை ஒட்டும் பயிற்சி; குடித்துவிட்டுப்போதையுடன், தான் தான் முந்திக் கொண்டு முன்னால் போக வேண்டும் என்ற முரட்டுக் குணம்; காது கேளாத கண் தெரியாத வழிப் போக்காளர்களின் தடுமாற்றம்; முதியவர்களின் தள்ளாடும் வழிநடை, குடும்பக் குழப்பத்தைச் சாலையில் போகும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/191&oldid=691005" இலிருந்து மீள்விக்கப்பட்டது