பக்கம்:நலமே நமது பலம்.pdf/192

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


190 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

பொழுதே அசை போட்டுக் கொண்டு மெய்மறந்து போவோர் வருவோரின் பரிதாப நிலை.

இவர்கள்தான் சாலையில் விபத்து நேர்வதற்குக் காரண கர்த்தாக்களாக இருக்கின்றனர். இத்தனை ஆபத்தான சூழ்நிலைகளுக்கு மத்தியிலே, சாலையிலே பத்திரமாகப் போய் வருவதென்றால், அதற்கென்று இருக்கும் ஒரு சில விதிமுறைகளை நாம் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். அவசியம் உண்மையோடு பின்பற்ற வேண்டும்.

ஆனவரை கடைப்பிடிக்க வேண்டும், என்று இங்கே முதலில் சாலையில் நடந்து செல்வோர் கவனிக்க வேண்டிய விதிமுகளைக் காண்போம்.

2. நடந்து செல்வோர் கவனிக்க:

1. சாலையைக் கண்காணித்து, போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரிகளின் வழிகாட்டும் சைகையின் படிதான் செல்ல வேண்டும்.

2. சாலையில் இருக்கும் வழிகாட்டும் விளக்கின் சைகை முறைகள், மற்றும் வீதியின் அடையாள முறைக் குறிப்புக்கள், சாலைக் குறிப்புகள் இவற்றையும் அனுசரித்துத்தான் செல்ல வேண்டும்.

3. அதிகக் கூட்டம் இல்லாத பகுதியில் இருக்கும் பாதை வழியே போவதுதான் நல்லது. வேறு வழி இல்லாது போனால், கூட்டத்தில்தான் செல்லவேண்டும் என்றிருந்தால் மிகவும் எச்சரிக்கையுடன்தான் செல்ல வேண்டும்.

4. நடந்து செல்வதற்குரிய பாதை என்று அமைக்கப் பட்டு இருக்கும் நடைபாதையைத்தான் பயன்படுத்த வேண்டும்.

5. எப்பொழுதும் இடது கைப் பக்கம் உள்ள நடைபாதை முறையைப் பயன்படுத்திக் கொள்வது நல்லதாகும்.