பக்கம்:நலமே நமது பலம்.pdf/193

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் 191

6.பாதையை நேரே பார்த்துப் போகாமல், சுற்று முற்றும் வேடிக்கை பார்த்து, தன்னை மறந்த நிலையில் நடப்பது கூடாது. அவ்வாறு வேடிக்கை பார்க்க வேண்டும் என்றால், ஓரிடத்தில் ஒதுங்கி நின்று பார்க்க வேண்டியதைப் பார்த்து விட்டு, பிறகு நடப்பதுதான் நல்லது.

இல்லையேல் எதிரில் வரும் ஆள் அல்லது வாகனங்கள் மீது மோதிக் கொள்ள நேரிடும். சமயத்தில் நடக்கும் பாதை நடுவே உள்ள பள்ளங்களில், கால் இடறி விழுந்து கைகால்கள் பிசகிக் கொள்ளவோ அல்லது எலும் பு முறிவுறவோ கூடும். - -

8. மழைகாலம் மற்றும் பனி, குளிர்காலம் போன்ற நாட்களில் சாலைகளில் மிகவும் எச்சரிக்கையாக நடக்க வேண்டும்.

9. குடை பிடித்துக் கொண்டு போக நேர்ந்தால், தனது பார்வையை மறைக்கும் படி முன்புறமாகச் சாய்த்துக் கொண்டு போகாதவாறு பிடித்துக் கொண்டு போக வேண்டும்.

10. அவசரமாகப் போகும் பொழுதோ அல்லது ஏதாவது ஒரு தலைச் சுமையுடன் அல்லது பாரத்துடன் தூக்கிக் கொண்டு நடக்கும்பொழுதோ அல்லது உடல் நலம் இல்லாமல் இருக்கும் பொழுதோ அல்லது மனம் குழம்பித் தடுமாறிய நிலையில் இருக்கும் பொழுதோ சாலையில் வெகு கவனமாக நடக்க வேண்டும்.

11. ஓடுகின்ற கார்களை அல்லது வேறு வாகனங்களைத் தொட முயற்சிக்கக்கூடாது.

12. எதிரே வந்து கொண்டிருக்கும் வாகனம் வருவதற்கு முன்னே, தான் போய் விடலாம் என்று எப்பொழுதும் முயலவே கூடாது. வாகனத்தின் வேகம் வேறு, மனிதன் நடக்கும் வேகம் வேறு. அதனால் வானத்துடன் போட்டி