பக்கம்:நலமே நமது பலம்.pdf/194

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


192 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

போடக்கூடாது. வாகனத்தைப் போக விட்ட பிறகு கடப்பதுதான் மிகவும் பத்திரமான முறையாகும்.

13. நிற்க வைத்திருக்கின்ற இரண்டு கார்களுக்கு இடையிலோ அல்லது நின்று கொண்டிருக்கும் கார்களுக்குப் பின்னாலோ நடக்கக்கூடாது.

14. ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கத்திற்குப் போக வேண்டும் என்று விரும்பினால், மேம்பாலம் அல்லது சுரங்கப் பாதை இருந்தால் அதைத்தான் பயன்படுத்த வேண்டும்.

மேம்பாலமோ அல்லது சுரங்கப் பாதையோ இல்லாது போனால், மிகவும் சுறுசுறுப்பாயுள்ள ஒரு சாலையினைக் கடக்க விரும்புகின்றவர்கள், பாதுகாப்பு வழிமுறைகளை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும்.

(அ) பல திசைகளையும் முதலில் சுற்றுமுற்றும் பார்த்து, வாகனங்கள் வருகின்றனவா என்ற தெரிந்து கொண்டு, வரவில்லை என்று உறுதியாக அறிந்து, பின்னரே கடக்க முயல வேண்டும். -

(ஆ) சாலையில் வழிகாட்டும் விளக்கின் அமைப்பு இருந்தால் (சிக்னல் சிஸ்டம்), பச்சை விளக்கு வரும்வரைக் காத்து இருந்து அதன் பிறகுதான் கடக்க வேண்டும்.

(இ) பச்சை விளக்கைப் பார்த்துப் போகும்பொழுது கடப்பதற்குரிய நடைபாதை காட்டும் கோடுகளுக்குள்ளே தான் நடந்து செல்ல வேண்டும்.

(ஈ) அதற்குப் பின்னர், வளைவில் இருந்து திரும்பி வருகின்ற வாகனங்கள் தங்களது பக்கம் வருகின்றனவா என்பதையும் முக்கியமாகக் கவனித்துப் பார்த்து நடக்க வேண்டும்.