பக்கம்:நலமே நமது பலம்.pdf/200

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


198 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

1. விரைந்து செல்வதற்குரிய வாகனங்களைப் பயன்படுத்துகிறோம். அதற்காக நமது மனோவேகத்திற்கு ஏற்பட வண்டிகளை ஒட்டிக் கொண்டு போய்விட முடியாது.

2. நாம் போகக்கூடிய சாலையின் மேடுபள்ள அமைப்பு, அங்கே அனுசரிக்கக்கூடிய சாலை விதிமுறைகள், அந்த இடத்தின் இயல்புக்கேற்ப மக்கள் கூட்டம் நெருக்கடி இவற்றை அனுசரித்துத்தான் ஒட்டிச் செல்ல முடியும். ஒட்டிச் செல்ல வேண்டும்.

3. வாகனங்களை ஒட்டுவோருக்கு நல்ல உடல் திறன், எப்பொழுதும் சலனமடையாத மனநிலை, ஆழ்ந்த மனக்கட்டுப்பாடு, சூழ்நிலையின் அபாயத்தை உணர்ந்து செயல்படும் முன்னறிவு (Anticipation), பதட்டப்படாத தன்னம்பிக்கை அனைத்தும் வேண்டும்.

4. ஒட்டுகின்ற ஒவ்வொருவரும் அந்த வாகனத்தின் அடிப்படை அமைப்புத் தன்மையைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.

5. நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில், ஓடும் வாகனத்தை நிறுத்துகின்ற ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டும்.

6. அதற்காக வாகனத்தைத் தகுந்த தரமான நிலையில் சீர்படுத்தி, செப்பனிட்டுப் பழுது பார்த்து வைத்திருக்க வேண்டும்.

7. ப்ரேக் அமைப்பு எப்பொழுதும் சரியாக, செயல்படும் தன்மையில் வைத்திருக்க வேண்டும். -

8. சாலை அமைப்புக் குறிகள், வளைவு, தரைப்பட அமைப்புகள், ஒருவழிப்பாதை, நின்று கவனித்து ஒட்டும் முறைகளை அறிந்து, அத்துடன் காலநிலை, ஒளிநிலை,