பக்கம்:நலமே நமது பலம்.pdf/202

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2OO டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

28. இல்லத்தில் பாதுகாப்பு /. இல்லமும் உள்ளமும்:

அவரவர் இல்லம் அவரவர்க்கு அரண்மனைதான். அது மண் குடிசையோ - மாட மாளிகையோ, எப்படி இருந்தாலும் வாழ்வோருக்கு அதுதானே அனைத்தும்.

ஓய்ந்த நேரத்தில் உட்கார, உண்ண, உறங்க என்று மட்டும் அமையாது, உள்ளத்தின் மறுமலர்ச்சிக்கும் உடல் வளர்ச்சிக்கும் உறுதுணையாக, குடும்பம் எனும் குளிர்சோலையை வளர்க்கும் கோயிலாகத்தான் வீடுகள் அமைந்திருக்கின்றன.

இல்லங்கள் எல்லாம் பத்திரமான இடங்கள் என்று சொல்லிக் கொள்ளலாமே தவிர, அவை அப்படித்தான் இருக்கின்றனவா என்று பார்த்தால், பத்திரிகையில் வரும் அன்றாட செய்திகள் அவ்வாறு இல்லை என்று தானே நமக்குச் சொல்லிக் காட்டுகின்றன.

பத்திரிகையிலே பிரசுரமாகும் பயங்கர விபத்துக்களின் பட்டியலில், பாதி இடத்திற்கு மேல் பிடித்துக் கொண்டிருப்பது வீட்டில் நடக்கும் விபத்துக்கள்தான்.

சமைக்கும்போது தீ; ஸ்டவ் வெடித்து சேலை பற்றி மரணம்; விஷம் குடித்த குடும்பம் என்றெல்லாம் திடுக்கிடும் செய்திகளைப் படிக்கும்போது, இல்லங்களும் பாதுகாப்பு அற்றவைதானா என்று நமது உள்ளங்கள் வருந்துவதும் இயற்கைதான்.

விபத்து நிகழ்ந்ததை எண்ணி வேதனைப்படும்போது, விபத்துக்கள் உண்டாகும் விதங்களையும் புரிந்து கொண்டால், விபத்து நிகழாமல் முடிந்தவரை விலகி வாழலாம். விலக்கியும் வாழலாம். அதற்கு உள்ளத்தின்