பக்கம்:நலமே நமது பலம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 2O1

ஈடுபாடும் ஒழுங்குற வாழும் பண்பாட்டின் மேம்பாடும் தேவைதான். -

2. விபத்துக்குரிய காரணங்கள்:

இல்லத்திலே நிகழும் விபத்துக்குரிய காரணங்களாக நாம் இரண்டினைக் கூறலாம். (அ) சூழ்நிலை (ஆ) மனிதர்களின் தவறுகள்.

(அ) சூழ்நிலை: வீட்டிலே விபத்துகள் நிகழ்கின்ற இடங்களாக சமையல் அறை, குளிக்கும் அறை, படுக்கை அறை, முற்றம், மாடிப்படி, வழுக்கல் தரை முதலியவற்றைக் குறிக்கிறார்கள்.

இவற்றிலே வழுக்கி விழுதல், இடறி விழுதல், தீக்காயம் படுதல் போன்ற விபத்துக்கள் நேர்வதற்குரிய காரணமாக, இல்லத்தின் சூழ்நிலை சில சமயங்களில் அமைந்து விடுகிறது.

(ஆ) மனிதர்களின் தவறுகள்: மனிதன் தவறு செய்பவன்தான் என்ற ஒரு பழமொழி இருந்தாலும், கவனக் குறைவாலும் அறியாமையாலும்தான் தவறுகளை மனிதர்கள் அதிகம் செய்கின்றனர்.

வேண்டுமென்றே தவறு செய்பவர்கள், பழிக்குப் பழி வாங்க வேண்டும் அல்லது தன்னையே பலியாக்கிக் கொள்ள வேண்டும் என்ற நினைவுக்கு ஆட்பட்டவர்களாகத்தான் இருக்க முடியும்.

தவறு நேர பல காரணங்கள் உண்டு. வீட்டில் தலைவராக விளங்குபவர், வேலை செய்யும் அலுவலகத் திற்கும், பணம் திரட்டும் பணிக்குமாக அலையும்போது, குடும்பத்தின் முழுப் பொறுப்பும் அமைப்பும் குடும்பத் தலைவியின் மீதே விழுந்து விடுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/203&oldid=691018" இலிருந்து மீள்விக்கப்பட்டது