பக்கம்:நலமே நமது பலம்.pdf/204

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2O2 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

வீட்டிலே சமையல்காரியாக, வீட்டைச் சுத்தம் செய்வதில் வேலைக் காரியாக, துணிகளைத் தூய்மைப் படுத்தும் பணியில் சலவைக்காரியாக, துணிகளைப் பழுது பார்க்கும் தையல்காரியாக, சில சமயங்களில் மருத்துவம் செய்யும் தாதியாக, மற்றும் தனது பிள்ளைகளுக்குப் பாடம் போதிக்கும் ஆசிரியையாகவும் ஒரு குடும்பத்தின் தலைவிக்குப் பல பொறுப்புகள் அனுதினம் விளைகின்றன. அது நமக்கும் தெரியும்.

ஒன்றையொன்றைச் செய்யத் தூண்டும் அவசர காலத்தில் தவறு நேர்வதுண்டு. அந்தத் தவறு சிறியதாகவும் இருக்கும். அதுவே விபத்தாக மாறுவதும் உண்டு.

ஆக, அவசரமும் பதட்ட நிலையும், அறியாமையும் அஜாக்ரதையும், தன்னால் முடியும் என்று முடியாத வேலை ஒன்றைச் செய்யும் போதும் உண்டாகின்ற விபத்துக்களே மிகுதியாக இருக்கின்றன.

இத்தகைய நிலைகளில் இல்லங்களில் உண்டாகின்ற விபத்துக்களை விழுதல் (Falls) காயங்கள் (Burns) விஷப் பொருட்கள் (Poisons) என்று பிரித்துக் கொண்டு உண்டாகும் ஆபத்துக்களைப் பற்றி விரிவாகப் புரிந்து கொள்வோம்.

3. விபத்தும் விதங்களும்:

1. விழுதல்: வீட்டிலே நடக்கும் விபத்துக்களினால் உண்டாகும் இறப்புக்களில் முக்கால் பாகம் விழுவதினால் விளைபவைதான். அவை எப்படி நிகழ்கின்றன என்று இனி காண்போம்.

1. தனக்கு எட்டாத ஒரு பொருளை எடுப்பதற்காக நாற்காலி அல்லது முக்காலி வைத்து அதன் மீது ஏறி சமநிை இழந்து தடுமாறிக் கீழே விழுதல். *- *