பக்கம்:நலமே நமது பலம்.pdf/206

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2O4 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

2. குளியலறையின் தரையை அடிக்கடித் தேய்த்து வழுக்காமல் பார்த்துக் கொள்ளுதல், அடிக்கடி சுத்தப் படுத்துதல் அவசியம்.

3. வீட்டுத்தரைப் பகுதிகளையும் வழுக்காமல், சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.

4. வீட்டில் பொருட்கள் கண்ட இடங்களில் இறைந்து கிடப்பதால்தான் தடுக்கி விழ நேரிடுகிறது. பொருட்களை ஒழுங்காக அடுக்கி வைத்துக் கொள்ளவும்.

5. இரவில் நடமாடும்போது பொருட்கள் கீழே கிடப்பது ஆபத்துதான். ஆகவே அப்பொழுது கவனமாக நடக்க வேண்டும்.

6. எது எது துன்பம் தருமோ, அவற்றையெல்லாம் ஒதுக்கி விபத்து நிகழாமல் தடுத்துக் கொள்ள வேண்டும்.

7. தாண்டிப் பழகி, கதவு நிலைகளில் தொங்கிப் பழகும் குழந்தைகளுக்கு, விளையாடும் வாய்ப்பினை வெளிப்புற ஆடுகளங்களில் ஏற்படுத்தித் தரலாம்.

அடுத்து, தீப்புண் மற்றும் வெட்டுக் காயங்கள் போன்றவற்றினைப் பற்றி விளக்கமாகக் காண்போம்.

2. காயங்கள்: வீடுகளில் ஏற்படுகின்ற விபத்துக்களில் 1/5 பாகம் தீக்காயங்கள் என்று விபத்து அறிக்கைக் குறிப்பு ஒன்று கூறகிறது.

எரிபொருள்கள், பிராண வாயு, வெப்பம் என்ற மூன்றும் ஒன்று சேர்ந்து இருக்கும் இடத்தில், நெருப்புப் பிடிப்பதற்கான சூழ்நிலை மிக எளிதாக உருவாகிவிடும். ஆகவே இந்த மூன்றும் இருக்கும் இடங்களில் மிகவும் விழிப்புடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.