பக்கம்:நலமே நமது பலம்.pdf/208

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2O6 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

இவ்வாறு தீக்காயங்கள் படும்போது சாமர்த்தியமாக சமாளிக்கத் தேவைப்படுவது முன் யோசனையும்

முதலுதவியும் ஆகும். முன் யோசனையும் முதலுதவியும்:

உங்களது ஆடையில் தீப்பிடித்துக் கொண்டால் அங்குமிங்கும் ஒடக்கூடாது. அப்படி ஓடினால் ஆடை முழுவதும் வேகமாகத் தீப்பற்றவும், பொருட்களின் மீது தீ தாவவும் வழி ஏற்படும். ஆகவே, தீப்பிடித்தவுடன் தரையில் படுத்து உடனே புரளவும், உருளவும் வேண்டும். கோணி அல்லது கனத்த சமுக்காளம் இருந்தால் அதனைப் போர்த்திக் கொண்டு உருளவும், வேறு யாருக்காவது இந்த நிலை வந்தால், இந்த முறையைத்தான் பின்பற்றச் சொல்லவும் வேண்டும்.

தீயால் உண்டாகும் காயங்களை நாம் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1. தோலைப் பாதிக்காத இலேசான காயம்.

2. தோல் சிவந்து கொப்பளமாகி விடும் காயம்.

3. தோல் வெந்து பாதிக்கப்பட்டு உள் தசையும் புண்ணாகிவிடும் காயம். * .

தோலைப் பாதிக்காத காயம், தோல் சிவந்து கொப்பளமாகும் காயங்களைப் பற்றி அதிக வேதனையோ விசாரமோ பட வேண்டாம்.

ஆனால், மூன்றாவது வகையான தீக்காயம், பெரும் புண்ணாகிப் போவதுடன், ஆட்பட்டவருக்கு அதிர்ச்சி தந்து சிறுநீர்ப்பை மற்றும் நுரையீரலைத் தாக்குவதுடன், இரத்த ஓட்டத்தையும் தாக்கி விடுகிறது. -