பக்கம்:நலமே நமது பலம்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் 19

3. உடல் நலத்திற்கு உதவுகிற சூழ்நிலைகள்

தனிப்பட்ட ஒருவரின் உடல்நலத்தைப் பாதிக்கிற போது, புலப்படுத்துகிற விஷயங்கள் பல உண்டு.

1. பாரம்பரியம் வழங்குகிற தேகநிலை.

2. சுற்றுப்புறச் சூழ்நிலை.

/. Unado/food? (Heredity):

பரம்பரை பரம்பரையாக ஒரு குடும்பம் பிறந்து, வளர்ந்து, தொடர்ந்தாற்போல் வாழ்ந்து வருகிறது

என்பதையே பாரம்பரியம் என்கிறோம்.

அப்படிப்பட்ட பரம்பரையானது தோற்றம் பெறுவது - தந்தையிடமிருந்து பெறுகிற ஆண் செல்லும் (Male Cell), தாயிடம் இருந்து பெறுகிற பெண் செல்லும் (Female Cell) கூடிக் கலந்து ஒன்றாக இணைகிறபோதுதான்.

இவ்வாறு ஒன்றாக இணைகிற செல்கள் இரண்டும் புதிதான ஒரு செல்லாகப் பரிணமித்துக் கொள்கிறது. அதாவது தந்தை - தாயிடம் இருந்து பெறுகிற செல்லில் இருந்து சமமான ஜீன்களைப் (Genes) பெற்றுக் கொண்டே, புதிய செல்லாகப் பிறப்பெடுத்துக் கொள்கிறது.

இந்த ஜீன்களே பரம்பரையாகத் தொடருகின்ற பாரம் பரியம் உள்ள குணங்களைக் கொண்டு விளங்குகிறது. ஜீன்கள் நிலவுகிற இடமாக குரோமோசோம்கள் இருக் கின்றன. அந்தக் குரோமோசோம்களோ, செல்லில் உள்ள நியுகிளியசில் உள்ளன.