பக்கம்:நலமே நமது பலம்.pdf/211

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் * 209

தெரியாமல் தூக்க மாத்திரைகளை விழுங்குபவர்கள் அதிகம் உண்டு.

இத்தகைய கொடுமை நிகழாமல் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், தகுந்த ஏற்பாடுகளைக் கீழ்க்காணும் முறையில் செய்து வைக்கலாம்.

1. மருந்துப் பொருட்களைத் தனியே வைத்தல்.

2. விஷ மருந்துகளைத் தனியே ஓரிடத்தில் பத்திரமாக வைத்தல். அவை குழந்தைகளுக்குக் கைக்கு எட்டாத உயரத்தில் வைப்பது நல்லது.

3. வசதி இருந்தால் விஷ மருந்துகளைத் தனியே பூட்டி வைத்து விடலாம். அதைப் பெரியவர்கள் மட்டுமே எடுத்துக் கையாள வேண்டும்.

4. வீட்டில் உள்ளவர்களுக்கும் குழந்தைகளுக்கும் எவை விஷமருந்துகள் என்பது நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். முடிந்தால் அதில் பெயர் எழுதி, தெரியும் படி ஒட்டி வைத்திருக்கலாம்.

5. திருட்டுத்தனமாகக் குழந்தைகள் தின்பண்டம் எடுப்பது போன்ற காரியங்களைச் செய்யும்பொழுதுதான், இதுபோன்ற அசம்பாவிதங்கள் நேர்ந்து விடுகின்றன.

6. மருந்துகூட குறிப்பிட்ட காலத்திற்கு மேல் பயன்படுத்தக் கூடாது என்றிருக்கும் காலக் குறிப்பைத் தெரிந்துதான் சாப்பிட வேண்டும்.

7. தூக்கக் கலக்கத்தில் எதையும் உண்ணும் பழக்கத்தை மேற்கொள்ளக் கூடாது.

8. உணவைக் கூட குறித்த காலத்திற்கு மேல் பாதுகாத்துச் சாப்பிடுவதால், அது விஷத்தன்மை உடையதாக மாறிவிடுகிறது.