பக்கம்:நலமே நமது பலம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 211

மின்விசைத் தாக்குதலும் முதலுதவியும்: மின்விசைத் தாக்குதலுக்கு ஆளான ஒருவரைக் காப்பாற்ற முயல வேண்டும். எப்படி? -

ரப்பர் காலணிகள் அல்லது ரப்பர் பையுறை கொண்டு அல்லது ரப்பர் பாய் மீது நின்று காக்கலாம். இல்லையேல் மரக்கட்டைகள், காய்ந்த பேப்பர் போர்டு அல்லது புத்தகம் இவைகள் மீது நின்று மின் கம்பியை அப்புறப்படுத்தலாம்.

முடிந்தால் அதற்கு முன்னே மெயினை அணைத்து விடவும் (Off). பாதிக்கப்பட்டவரை, மின் கம்பி தொடர்பிலிருந்து அப்புறப்படுத்திய பிறகு அவரது துணிகளை நெகிழ்த்தி விடவும்.

சுத்தமான காற்றோட்டம் உள்ள இடத்தில் அவரைப் படுக்க வைக்கவும். அமைதிப்படுத்தவும்.

வாயைத் திறந்து நாக்கு உள்ளே இழுத்துக் கொள்ளாதவாறு நாக்கை இழுத்து வைக்கவும்.

மூச்சு வரவில்லை என்றால் செயற்கை முறையில் சுவாச முறையைப் பயன்படுத்தவும்.

அதற்குள்ளே மருத்துவரை அழைத்துவர ஏற்பாடு செய்யவும். முதலுதவி மட்டும் போதும்.

பள்ளி மாணவர்கள் வீடுகளில் பாதுகாப்புடன் வாழ்வதில்தான் அவர்களின் வளமான வருங்காலமே அடங்கி இருக்கிறது. அது சமுதாயப் பாதுகாப்புக்கே ஆதாரமாக அமைந்தும் விடுகிறது.

வீட்டுப் பாதுகாப்புதான் முதன்மையானது. அதில் இருந்து தான் நாட்டுப் பாதுகாப்பும் வலிமை பெறுகிறது.

குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்தே எல்லாவற்றை யும் கற்றுக் கொள்ள முயல்வதால், பெற்றோர்களுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/213&oldid=691029" இலிருந்து மீள்விக்கப்பட்டது