பக்கம்:நலமே நமது பலம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

அந்தப் பொறுப்பும் இருப்பதால், பிள்ளைகளின் பாதுகாப்புக்கும் ஏற்ற முறையில் வாழ்ந்து காட்ட வேண்டும்.

அதற்கேற்ற வகையில் பயன்படுமாறு சில குறிப்புக்கள் இங்கே தரப்பட்டிருக்கின்றன.

1. தாங்கள் பயன்படுத்துகின்ற பொருட்களின் தன்மையை நன்கு உணர்ந்து, அதற்கேற்றவாறு வகைப் படுத்திப் பயன்படுத்த வேண்டும்.

2. இல்லத்தினைத் தூய்மையாக வைத்துக் கொள்வ துடன், செளகரியமாக வாழும் வகையில் பொருட்களை ஒழுங்கு படுத்திக் கொள்ள வேண்டும்.

3. அறியாமையைவிட அலட்சிய மனப்போக்கும் ஆர்ப்பாட்டமான நடத்தையும்தான் மிக ஆபத்தானதாகும்.

4. ஒழுங்கு முறையாக வாழ்வதை, பயபக்தியுடன் போற்ற வேண்டும்.

5. தவறான முறையிலோ அல்லது குறுக்கு வழியிலோ, எதையும் கையாளுகின்ற போக்கையும் அவசரத் தன்மையை யும் முடிந்தவரை தவிர்த்துவிட வேண்டும்.

6. கூர்மையான ஆயுதங்களைக் கவனமாகக் கையாள வேண்டும்.

7. தெரிந்தால் செய்யலாம். தெரியாத எந்தச் செயலையும் தெரிந்தவர் மூலமாகவே அணுகிச் செய்யவும்.

8. பிறருக்கு அறிவுரை தருவது மட்டும் போதாது. சொல்பவரே தானும் செய்கின்ற பண்பாட்டினைப் பெற்றுத் திகழ வேண்டும். -

9. மின்சாரம், விஷ மருந்துகள் இவற்றிடம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/214&oldid=691030" இலிருந்து மீள்விக்கப்பட்டது