பக்கம்:நலமே நமது பலம்.pdf/216

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


214 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

2. விபத்துக்குரிய காரணங்கள்:

1. பயிற்றுவிப்பாளர்களின் பற்றாக்குறை, அதாவது இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவு, தேவையான அளவு ஆசிரியர்கள் இல்லாமை.

2. சரியாக அமையாத விளையாட்டுக் கருவிகள், குறைகள் நிறைந்த பொருட்களால் குந்தகம் விளைவது இயற்கைதானே!

3. விளையாடுவதற்குரிய வசதிக் குறைவுகள்.

4. முரட்டுத்தனம் நிறைந்த சில மாணவர்களின் ஒழுங் கீனமான நடத்தைகள்.

5. அரைகுறை திறமையும் அலட்டிக் கொள்ளும் செயல்முறையும் கொண்டவர்களின் குரங்காட்டங்கள்.

6. மாணவர்களின் பலம் இல்லாத (பலஹlனமான) உடல் அமைப்புக் காரியங்கள்.

7. செயல்படுகின்ற அந்தந்த விளையாட்டுக்களிலேயே இருக்கின்ற விபத்துக்கான வாய்ப்புகள். (கோலூன்றித் தாண்டுதல், உயரத் தாண்டுதல் போன்ற நிகழ்ச்சிகள்).

மேலே கூறிய காரணங்களுக்கேற்ப முறையான மாற்றுக் காரியங்களைச் செய்தால், விபத்துக்கள் நிகழாமல் முடிந்தவரை தவிர்த்து விடலாம்.

3. விபத்து நிகழாமல் தடுக்கும் வழிமுறைகள்:

1. ஆர்வத்தாலும், அளவிலா சக்தி நிறைந்திருப்பதாலும் மாணவர்கள் விளையாடும்போது விழுந்து விபத்துக்

குள்ளாவது இயல்பாக நடப்பதுதான்.